அஜீத்தின் ஆரம்பத்தோடு ஃபேஸ்புக் கணக்கை ஆரம்பிக்கிறேன்: இயக்குனர் ஷங்கர்

By Siva

சென்னை: இயக்குனர் ஷங்கர் ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளார். முதன்முதலாக ஆரம்பம் படம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

திரை உலக பிரபலங்கள் பலர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் உள்ளனர். அவர்கள் தங்கள் படங்கள் குறித்தும், அந்த நேரத்தில் தாங்கள் நினைப்பது, செய்வது குறித்தும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் ஃபேஸ்புக்கில் சேர்ந்துள்ளார்.

இது தான் ஒரிஜினல்

இது தான் ஒரிஜினல்

https://www.facebook.com/shankarofficial என்பது தான் என்னுடைய அதிகாரப்பூர்வமான பக்கம் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரில் உள்ள போலி ஃபேஸ்புக் பக்கங்களை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் சேர வேண்டும் என்று திடீர் என்று தோன்றியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தகவல்களை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன் என்று ஷங்கர் தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

துவக்கமாக ஆரம்பம்

துவக்கமாக ஆரம்பம்

ஃபேஸ்புக்கில் சேர்ந்ததற்கு ஆரம்பமாக... 'ஆரம்பம்' படம் பார்த்தேன்... நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. அஜீத் ஸ்டன்னிங்காக இருக்கிறார்...யுவனின் பின்னணி இசை அருமை... ஏ.ஏம். ரத்னம் சாருக்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஆரம்பம் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று ஷங்கர் தனது முதல் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தான் பணியாற்றிபோது எடுக்கப்பட்ட 9 புகைப்படங்களை ஷங்கர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இது தவிர ஐ படத்தின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X