grammys 2024: இந்தியாவின் சக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது..பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகம் முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான 66வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

கிராமி விருதுகள் 2024: ஆண்டின் சிறந்த பாடலாக பாடகி பில்லி எலிஷ் (What Was I Made For) பார்பி வெற்றி பெற்றார். சிறந்த பாப் குரல் ஆல்பம் டெய்லர் ஸ்விஃப்ட் 'மிட்நைட்ஸ். மற்றும் சிறந்த நாட்டுப்புற ஆல்பத்தில் லைனி வில்சன் (Bell Bottom Country) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

shankar mahadevan and Zakir hussain won grammy awards

சக்தி ஆல்பம்: மேலும், பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன், தபேலா கலைஞர் ஜாகீர் உசேன், கிதார் இசைக்கலைஞர் ஜான் மெக்லாக்லின், வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன், தமிழ்நாட்டை சேர்ந்த தாள கலைஞர் செல்வகணேஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஷங்கர் மகாதேவன், ஜாகீர் உசேன் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் கிராமி விருதை பெற்றுக்கொண்டனர்.

அப்போது பேசிய ஷங்கர் மகாதேவன், கடவுள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவை நினைத்து பெருமை கொள்வதாகவும், தனது மனைவிக்கு இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புவதாகவும் ஷங்கர் மகாதேவன் கூறினார். விருது பெற்ற சக்தி குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

shankar mahadevan and Zakir hussain won grammy awards

பாராட்டிய ஏஆர் ரஹ்மான்: இந்த விழாவில் கலந்து கொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், மூவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, இந்தியாவுக்கு கிராமி மழை பொழிகிறது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். உஸ்தாத் ஜாகீர் உசேனுக்கு இது மூன்றாவது கிராமி விருது என்பதால், இணையத்தில் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X