பிரபல பாடகரின் மகன்.. சிவம் மகாதேவன்.. பாடகரானார்!

சென்னை : சங்கர் மகாதேவன் மகன் சிவம் மகாதேவன் சீறு படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். தற்போது அந்த பாடல் வெளியாகி வைரலாகி உள்ளது.

சங்கர் மகாதேவன் தன் குரலால் பலரையும் கவர்ந்தவர். இவரது குரலை கேட்க ஒரு காலத்தில் பலரும் காத்து இருந்தனர். தனது குரலால் அனைவரையும் கட்டி பொட்டவர்.
இந்துஸ்தன் கிளாசிக்கல் மற்றும் கர்னாடிக் மியூசிக் போன்றவற்றை முறையாக கற்று கொண்டு திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். மேலும் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தும் உள்ளார் சங்கர் மகாதேவன்.

Shankar Mahadevan’s Son Sivam Sings

பல இசை அமைப்பாளர் இசையில் பாடல்களை பாடியுள்ளார் சங்கர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளிலும் பாடல்கள் பாடி உள்ளார். தனியார் தொலைக்காட்சிகளில் பல இசை போட்டிகளில் நடுவர் ஆகவும் பங்கேற்று இருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் என்ன சொல்லப்போகிறார் என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றார். மத்திய அரசு கடந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி அவரை கௌரவித்தது. சங்கர் மகாதேவன் இஷான் லாய் ஆகியோர் உடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இவர் பாடிய அந்த டைட்டில் பாடல் மிகவும் பிரபலமானது. தற்போது இவரின் மகன் பாடகர் சிவன் மகாதேவன் பாடகராகியுள்ளார்.

டி.இமான் இசையில் ஜீவா நடித்து வெளிவர இருக்கும் படம் சீறு. இப்படத்தில் சங்கர் மகாதேவன் மகன் சிவம் மகாதேவன் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த படத்தை ரத்னா சிவா இயக்க உள்ள ஒரு கமர்ஷியல் படமாகும். இந்த படத்தின் பாடலுக்கான பாடல் வரிகளை எழுதியவர் பாடலாசிரியர் விவேகா. அது தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X