ரஜினியை நேரில் சந்தித்து 'ஐ' அழைப்பிதழ் கொடுத்த ஷங்கர்!

By Shankar

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார் இயக்கநர் ஷங்கர். விழாவுக்கு நிச்சயம் வருவதாக ரஜினி உறுதியளித்தார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஐ.'

இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் விக்ரமும் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சனும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பி.சி.ஸ்ரீராம்.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இசை வெளியீடு

இசை வெளியீடு

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி நடக்கிறது. விழாவை இதுவரை இந்திய சினிமா பார்த்திராத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்துகின்றனர்.

அர்னால்ட்

அர்னால்ட்

தெலுங்கு ஐ படத்தின் ஆடியோவை ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானும், தமிழ் ஐ படத்தின் ஆடியோவை ஹாலிவுட் நடிகர் அர்னால்டும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இவர்களில் அர்னால்ட் வருவருது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. ஜாக்கி சான் வருவது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ரஜினியுடன் சந்திப்பு

ரஜினியுடன் சந்திப்பு

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் நேற்று ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து 'ஐ' படத்தின் அழைப்பிதழை கொடுத்து முறைப்படி அழைப்பு விடுத்தார். கண்டிப்பாக விழாவுக்கு வருவதாக உறுதி கூறிய ரஜினி, 'ஐ' படம் குறித்து ஷங்கருடன் விரிவாகப் பேசினாராம்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரஜினி, அர்னால்ட் என சினிமா உலகின் ஜாம்பவான்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் பலரும் இதில் பங்கேற்க ஆவலுடன் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X