4 நாள் ரோப்பில் தொங்கி நடித்த கமல்.. இந்தியன் 2 மேக்கப் வித்தியாசம்.. வெளிப்படையாக பேசிய ஷங்கர்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத நடிகர் சித்தார்த் இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
இந்தியன் 2 படத்தின் டிரெய்லரை பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் பலரும் படத்தின் டிரைலர் வெளியானால் இந்தியன் 2 படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்தியன் 2 டிரெய்லர் வெளியீட்டு விழா காலையில் நடைபெற்ற நிலையில் யூடியூபில் இன்று மாலை 7:00 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் ஷங்கர் கமல்ஹாசனின் மேக்கப் மற்றும் இந்த படத்துக்காக அவர் எந்த அளவுக்கு மெனக்கெட்டு நடித்துள்ளார் என்பது குறித்து பேசி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மேக்கப் சரி இல்லை: இந்தியன் படத்திற்கு மேக்கப் போடும் போது திக் மேக்கப்பாக இருந்தது. கமல்ஹாசன் முகமே ரசிகர்களுக்கு தெரியவில்லை. ஆனால், தற்போது டெக்னாலஜி வளர்ந்து தின் மேக்கப் வந்திருக்கிறது. பிராஸ்தெடிக் மேக்கப்பில் கமல்ஹாசனின் முகம் பளிச்சென தெரியும் அளவுக்கு உள்ளது. கமல் சார் நடிப்பை ரசிகர்கள் நல்லாவே விட்னஸ் பண்ணலாம் எனக் கூறியுள்ளார். இந்தியன் 2 படத்தில் தான் மேக்கப் சரியில்லை என்றும் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் போல கமல் இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வரும் நிலையில் ஷங்கரின் இந்த விளக்கம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரோப்பிலேயே தொங்கி நடித்தார்: இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கிய காட்சிக்கு கமல் சார் நான்கு நாட்கள் ரோப்பிலேயே தொங்கி நடித்தார். பிராஸ்தெடிக் மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு காலை முதல் மாலை வரை ரோப்பில் தொங்கி இந்த வயதில் வேறு எந்தவொரு நடிகராலும் நடிக்கவே முடியாது என ஷங்கர் கூறியுள்ளார். அந்தளவுக்கு சினிமாவுக்காக டெடிகேஷனுடன் உழைக்கும் மனிதர் கமல் சார் என பாராட்டியுள்ளார்.
வேறலெவல் மிரட்டல்: இந்தியன் 2 டிரெய்லர் வெளியான பின்னர் அந்த படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எங்கேயோ போய் விடும் என டிரெய்லரை பார்த்த பலரும் ஷங்கரின் தரமான சம்பவம் இந்த இந்தியன் 2 படம் என பாராட்டி வருகின்றனர். இந்த ஆண்டு வெளியாக உள்ள தமிழ் சினிமா படங்களையே வசூலில் இந்தியன் 2 தூக்கி சாப்பிட்டு விடும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 450 கோடி வரை கமல்ஹாசனுக்கு பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளித் தந்த நிலையில், இந்தியன் 2 வசூல் 1000 கோடியை தொடுமா என்கிற கேள்வி அதிகரித்துள்ளது. இந்தியன் 2வின் வெற்றி தான் லைகாவுக்கு மிகப்பெரிய நிம்மதியை தரும் என்றும் இந்தியன் 3 படத்துக்கான எதிர்பார்ப்பையும் தூண்டும் என்றும் கூறுகின்றனர்.
கல்கியில் வில்லன்: இந்தியன் 2 படத்துக்கு முன்னதாக கமல்ஹாசனை வில்லனாக ரசிகர்கள் பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தில் இன்னும் 2 தினங்களில் பார்த்து பிரம்மிக்கப் போகிறார்கள் என கல்கி படக்குழுவும் தொடர்ந்து புரமோட் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications











