சென்டிமென்ட்டை கைவிட்ட ஷங்கர்...மெகா படத்திற்கு புதிய கூட்டணி ரெடி
ஐதராபாத் : தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க போவதாக பிப்ரவரி 12 ம் தேதி டைரக்டர் ஷங்கர் அறிவித்தார். இது ராம் சரணின் 15 வது படம். இயக்குனர் தில் ராஜூவிற்கு 50 வது படம்.

அதனால் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில், இந்திய சினிமாவிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மெகா பட்ஜெட் படமாக இயக்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார்.
பொதுவாக ஷங்கர் படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை அமைப்பார். ஆனால் சமீப காலமாக அனிருத்துடன் கூட்டணி வைத்துள்ளார் ஷங்கர். கமலை வைத்து ஷங்கர் இயக்கும் இந்திய 2 படத்திலும் அனிருத் தான் இசை அமைக்கிறார்.
ராம் சரண் - ஷங்கர் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
அடுத்து வரும் பண்டிகை நாளில் இப்படம் பற்றிய மேலும் பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











