Velpari: இந்தியன் 3 ரிலீஸ் ஆகலைன்னா என்ன?.. வேள்பாரி படத்தை ஆரம்பிக்க திட்டமிட்ட ஷங்கர்.. ஹீரோ அவரா?

சென்னை: இந்திய சினிமாவிலேயே பிரமாண்ட படங்களை இயக்கி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்த இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 2.0, இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அடியை சந்தித்தன. இதில், இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் பாக்ஸ் ஆபிஸிலும் படுத்து விட ஷங்கரை அவுட்டேட்டட் இயக்குநர் என்றே நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

ஆனால், தனது கனவுப்படமான வேள்பாரி படத்தை இயக்கியே தீருவேன் என்றும் சரியான கம்பேக் கொடுக்க ஷங்கர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி படம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப் போவதாக லேட்டஸ்ட் தகவல்கள் கோலிவுட்டில் வெளியாகி உள்ளன.

Shankar plan to start his dream project Velpari with Top Tamil Actor from June 2026

மேலும், வேள்பாரி படத்தில் ஹீரோவாக ஒரு தமிழ் நடிகர் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், கண்டிப்பாக ஷங்கர் உடன் இணைந்து அந்த நடிகர் தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 3 ரிலீஸ் இல்லை: லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் இணைந்து ஷங்கர் இந்தியன் 3 படத்தை உருவாக்கிய நிலையில், இந்தியன் 2 படத்தின் தோல்வி காரணமாக இந்தியன் 3 படத்தை முடிக்க மேலும், ஷூட்டிங்கிற்கு பணம் ஒதுக்க முடியாது என்கிற முடிவில் லைகா நிறுவனம் கறார் காட்டி வரும் நிலையில், இந்தியன் 3 திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருதநாயகம் படத்தை போல அந்த பிரமாண்ட படத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர்.

Shankar plan to start his dream project Velpari with Top Tamil Actor from June 2026

வேள்பாரி ஷூட்டிங் எப்போது?: வேள்பாரி படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என்றும் எந்தவொரு முன்னணி நடிகரும் அந்த படத்தில் நடிக்க முன்வருவதில்லை என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இயக்குநர் ஷங்கர் வேள்பாரி படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை செய்து வருகிறார் என்றும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பே ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹீரோ யாரு?: நடிகர் சூர்யாவை வைத்து தான் ஷங்கர் வேள்பாரி படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், அஜித்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்றால் சூர்யா தான். அவர் நடித்தால் தான் கச்சிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கி அட்லூரி படத்தை முடித்து விட்டு ஷங்கர் இயக்கத்தில் சூர்யா நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். சூர்யா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், சியான் விக்ரம் தான் ஒரே தேர்வு என்றும் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஷங்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம். ஹீரோக்கள் எத்தனை தோல்விப் படங்களை கொடுத்தாலும், ரசிகர்கள் அடுத்த படத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது போல டாப் இயக்குநர்களும் கண்டிப்பாக கம்பேக் கொடுப்பார்கள் என்பதை ரசிகர்களும் புரிந்துக் கொள்வார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X