வேள்பாரிக்கு முன்பு ஷங்கர் செய்திருக்கும் பிளான்.. என்ன படம் எடுக்கிறார் தெரியுமா?
சென்னை: இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். அவர் இப்போது இயக்கும் படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. கடைசியாக அவர் இயக்கிய கேம் சேஞ்சர், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியைத்தான் சந்தித்தன. அடுத்ததாக வேள்பாரி நாவலை படமாக எடுக்கவிருக்கிறார். இதற்கான வேலைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த சூழலில்; அதற்கும் முன்னதாகவே அவர் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் இயக்குநர் பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக மாறியவர் ஷங்கர். முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய முதல்வன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், அந்நியன், எந்திரன் என வரிசையாக ஹிட் படங்கள் அமைந்தன. அதனால் இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றார்.

சறுக்கிய ஷங்கர்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவருக்கு ஐ படத்திலிருந்து சறுக்கல் ஆரம்பித்தது. அந்தப் படத்தின் தோல்வி கொடுத்த வடு மறைவதற்குள் 2.0 திரைப்படமும் தோல்வியடைந்தது. இப்படிப்பட்ட சூழலில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கினார். அப்படமும் தோல்வி. தோல்வி என்பதை தாண்டி மிகப்பெரிய ட்ரோலையும் சம்பாதித்தது. ஷங்கரின் பல காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்காது.
கேம் சேஞ்சரும் அடி: தன்னுடைய கதையை அடி வாங்குகிறது; வேறு ஒருவரின் கதையை வாங்கி திரைக்கதை அமைக்கலாம் என்ற ஐடியாவில் கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கேம் சேஞ்சர் கதையை திரைக்கதை எழுதி படமாக்கினார். அதுவும் மோசமான தோல்வியை சந்தித்தது. அதிலும், ஷங்கர் டீசன்ட்டாக சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடலாம் என்றும் அவரை கிண்டல் செய்தவர்கள் சொன்னார்கள். இருப்பினும் அடுத்த படத்தில் அவர் தரமான கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
வேள்பாரிக்கு முன்னதாக: அதிலும் சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைத்தான் ஷங்கரும், அவரது ரசிகர்களும் ரொம்பவே நம்பியிருக்கிறார்கள். அதற்கான வேலைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த சூழலில்; அதற்கும் முன்னதாக ஷங்கர் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.குறைந்த பட்ஜெட்டில் சீட் நுனியில் அமர வைக்கும் த்ரில்லர் கதையைத்தான் அவர் அடுத்ததாக படமாக்கப்போகிறார் என்றும், அதில் நடிக்க இரண்டு இளம் ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டுவிட்டார் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
