Indian 2: அடிபொலி.. இந்தியன் 3க்கு அடிபோடும் ஷங்கர்.. டிஜிட்டல் உரிமமே இத்தனை கோடிக்கு வியாபாரமா?

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் ரஷ் மட்டுமே 6 மணி நேரம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இதனை சரியாக சீரமைத்தால் இந்தியன் 3 படத்தையே எடுத்து விடலாம் என்கிற திட்டத்துக்கே ஷங்கர் வந்துள்ளாராம்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு ஷங்கருக்கு கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக கொடுத்து விட்டு கல்கி படத்தில் நடிக்க கமல் கிளம்பி விட்டார்.

இந்நிலையில், மீண்டும் அவரை அழைத்து வந்து இந்தியன் 3 படத்துக்கான சில நாட்கள் ஷூட்டிங்கை முடிக்க முடியுமா? என்கிற குழப்பத்தில் லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் இருப்பதாகவும் பேச்சுக்கள் கசிந்துள்ளன.

Shankar plans for Indian 3 and Netflix bags Indian 2 digital rights for 200 plus crores?

இந்தியன் 2 ரெடி: இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு இந்தியன் 2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் ராஜமெளலி மற்றும் ஷங்கர் இடையே நிலவி வரும் போட்டி ஒரு பக்கம் இருக்க, கம்பேக் கொடுத்தாக வேண்டிய சூழலில் ஷங்கர் இந்தியன் 2வை தரமான சம்பவமாக இறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் மொத்த ரஷ்ஷையும் பார்த்த ஷங்கருக்கு அந்த படத்தின் நீளம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் வந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியன் 3 உருவாகிறதா: 6 மணி நேர காட்சிகளை 3 மணி நேரமாக குறைத்து இந்தியன் 2 படமாக வெளியிடுவதற்கு பதிலாக இந்தியன் 3 படத்தையே உருவாக்கி விடலாமா என்கிற யோசனையிலும் ஷங்கர் ஆலோசித்து வருகிறாராம். மேலும், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனங்களிடமும் கமல் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Shankar plans for Indian 3 and Netflix bags Indian 2 digital rights for 200 plus crores?

200 கோடிக்கு மேல் டிஜிட்டல் உரிமம்: இந்தியன் 2 படத்திற்கான பட்ஜெட் 180 கோடி என சொல்லப்பட்ட நிலையில், 220 கோடி வரை தற்போது வந்து விட்டதாம். ஆனால், அதை பற்றி கவலைப்படவே தேவையில்லாத அளவுக்கு படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் 200 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கி விட்டதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

மேலும், படத்தின் ஆடியோ உரிமம், சாட்டிலைட் உரிமம், தியேட்டர் வியாபாரம், ஓவர்சீஸ் வியாபாரம் என்று பார்த்தால் ஒட்டுமொத்தமாக 1000 கோடி வந்து விடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பு தரப்பு இந்தியன் 3 படத்தையும் உருவாக்கும் முயற்சியிலும் இறங்கும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X