முதல் பான் இந்தியா இயக்குநர் மணிரத்னம் தான்.. பொன்னியின் செல்வன் விழாவில் இயக்குநர் ஷங்கர் புகழாரம்!

சென்னை: லைகா தயாரிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் ஷங்கரின் பேச்சு டிரெண்டாகி வருகிறது.

மணிரத்னம் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் அவர் தான் பான் இந்தியா இயக்குநர் என்றும் பாராட்டி பேசினார்.

லைகா சுபாஸ்கரன், கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாத்தில் ஆழ்த்தின.

ஜெயராம் மிமிக்ரி

ஜெயராம் மிமிக்ரி

நடிகர் ஜெயராம் நிகழ்ச்சியில் பேசும் போது ஜெயம் ரவி போல மிமிக்ரி செய்து பேசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியன் நம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு தனது மகன் காளிதாஸ் ஜெயராம் உடன் வருகை தந்தார்.

பொன்னியின் செல்வன் விழாவில் ஷங்கர்

பொன்னியின் செல்வன் விழாவில் ஷங்கர்

பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர் கலந்து கொண்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இயக்குநர் மிஷ்கின், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

பான் இந்தியா இயக்குநர்

பான் இந்தியா இயக்குநர்

இப்போ எல்லாரும் பான் இந்தியா படங்கள், பான் இந்தியா நடிகர்கள்னு சொல்றாங்க.. அப்போவே ஷாருக்கானை எல்லாம் இயக்கி பான் இந்தியா இயக்குநர் என்கிற பெருமையை பெற்றவர் இயக்குநர் மணிரத்னம் மட்டும் தான் என பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மேடையில் பேசியதும் ஒட்டுமொத்த மேடையே கைதட்டி மரியாதை செலுத்தியது. ரோஜா, பம்பாய் போன்ற படங்கள் இந்தியாவின் அனைத்து மூலை முடுக்கிலும் ஹிட் அடித்தது என்றார்.

தளபதி பாட்டு தான் இன்ஸ்பிரேஷன்

தளபதி பாட்டு தான் இன்ஸ்பிரேஷன்

என்னோட படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதே மணிரத்னத்தின் படங்கள் தான். ரஜினிகாந்தின் தளபதி படத்தில் வரும் அந்த பாடலின் பிரம்மாண்ட காட்சி தான் நான் என் பாடல்களையும் படத்தையும் பெருசா எடுக்கணுங்கிற எண்ணத்திற்கே காரணம் என்றும் இயக்குநர் ஷங்கர் பேசினார்.

இந்தியன் 2 டீம்

இந்தியன் 2 டீம்

கமல்ஹாசன், ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியன் 2 படக்குழுவே இந்த பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து அடுத்த பிரம்மாண்ட படமாக இந்தியன் 2வை வெளியிடப் போவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X