மீண்டும் சொந்தப் படம் எடுக்கிறார் ஷங்கர்!

முதல்வன், காதல், வெயில், கல்லூரி, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, ஈரம் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்த ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இரட்டை சுழி, அனந்தபுரத்து வீடு போன்ற தோல்விப் படங்களால் இழுத்து மூடப்பட்டது.
இப்போது மீண்டும் படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ள ஷங்கர், எழுத்தாளர் ராஜூ முருகனை இயக்குநராக அறிமுகம் செய்கிறார்.
ராஜூ முருகன் சொன்ன ஒரு கதை ரொம்பப் பிடித்துப்போனதால், படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்தாராம் ஷங்கர்.
இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்து தொடர்ந்து புதிய படங்களைத் தயாரிக்கப் போகிறாராம். அதுமட்டுமல்ல, தனது இயக்கத்திலும் ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications