Game Changer Public Review: கேம் சேஞ்சரில் ஷங்கர் டச் இல்லை.. எதுவுமே செட் ஆகல.. ரசிகர்கள் விமர்சனம்!
சென்னை: கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதி, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகி உள்ள படம் கேம் சேஞ்சர். இந்தப் படத்தில் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தினை தில் ராஜ் தயாரித்துள்ளார். படம் பொங்கலை டார்கெட் செய்து இன்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்தினைத் தெரிவித்துள்ளனர்.
படம் பார்த்த ரசிகர் ஒருவர், படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளது. ஆனால் இரண்டாம் பாதியில் படத்தினை சொதப்பிவிட்டார்கள். ஷங்கர் படம் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தினைப் பார்க்க வந்தோம். ஆனால், படம் அந்த அளவுக்கு இல்லை. இந்தியன் 2 படத்தில் சொதப்பிய ஷங்கர் இந்தப் படத்தில் கம் பேக் கொடுப்பார் என நம்பிச் சென்றோம், ஆனால் படம் படு சொதப்பல் எனக் கூறியுள்ளார்.

அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது படத்தில் எஸ்.ஜே. சூர்யா உள்ளார். எனவே, அவருக்காகவே படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து வந்தேன். ஆனால் சரிபோதா சனிவாரம் படத்தில் எப்படி நடித்தாரோ, அதேபோல்தான் இந்தப் படத்திலும் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வேரியேஷன் இல்லை. படத்தில் கதாநாயகி எதற்கு இருக்கின்றார் என்றே தெரியவில்லை எனக் கூறினார்.

சுவாரஸ்யமாக இல்லை: மற்றொரு ரசிகர் கூறும்போது, நான் சின்ன வயதில் பார்த்த படங்களின் கதையை ஷங்கர் எடுத்து வைத்துள்ளார். கடுப்பாக உள்ளது. ஷங்கர் படம் போலவே இந்தப் படம் இல்லை. கார்த்திக் சுப்பராஜ் கதை எனக் கூறினார்கள். ஆனால் ஷங்கரின் முதல்வன் படம்போல உள்ளது. படத்தில் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. ஏமாற்றம்தான், ஷங்கர் வித்தியாசமாக கதைகள் எழுத வேண்டும் எனக் கூறினார்.

ஷங்கர் டச்: ஷங்கர் ராம் சரண் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். கார்த்திக் சுப்பராஜ் கதை என்றெல்லாம் பெரும் நம்பிக்கையில் இந்தப் படத்தைப் பார்க்க வந்தேன். ஆனால் படம் படு சொதப்பல். படத்தின் இண்ட்ரோ காட்சி நன்றாக உள்ளது. ஒரு ஃப்ளாஷ்பேக், படத்தின் பாடல்கள் நன்றாக உள்ளது. படத்தில் ஷங்கர் டச் இல்லை. காமெடியெல்லாம் கொஞ்சமும் செட் ஆகவில்லை என ஒரு ரசிகர் கவலையாக பேசியுள்ளார்.

திருப்திகரமாக இல்லை: மற்றொரு ரசிகர் கூறும்போது, ராம் சரணின் நடிப்பு சிறப்பாக உள்ளது. ஆனால், இது ராம் சரண் படம் போல இல்லை. இது ஆவரேஜ்ஜான படம்தான். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகச் சென்றது. ஆனால் படத்தின் கதை எமோஷனலாக எங்கேயும் கனெக்ட் ஆகவில்லை. ராம் சரண் நடிப்பு நன்றாக உள்ளது. ஆனால் படம் திருப்திகரமாக இல்லை. அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஆனால் அது படத்திற்கு எந்த வகையிலும் பயன் அளிக்கவில்லை" எனக் கூறியுள்ளார். கேம் சேஞ்சர் படத்திற்கு ரசிகர்களின் இந்த கலவையான விமர்சனம் இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது.



Click it and Unblock the Notifications











