இந்தியன் 2வுக்கு நெகட்டிவ் விமர்சனம் வரும்னு எதிர்பார்க்கல.. கேம் சேஞ்சர், இந்தியன் 3.. ஷங்கர் ஓபன்!

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, சமுத்திரகனி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. ஜனவரி 10ம் தேதி கேம் சேஞ்சர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் குமாரின் விடாமுயற்சி, பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் உள்ளிட்ட படங்கள் 2025ம் ஆண்டு பொங்கல் போட்டியில் பங்கேற்க உள்ளன. சியான் விக்ரமின் வீர தீர சூரன், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகின்றன.

shankar game changer indian 3

இந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில், அந்த படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஷங்கர்.

நெகட்டிவ் விமர்சனம் எதிர்பார்க்கல:

இந்தியன் 2 படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் இந்தளவுக்கு வரும் என எதிர்பார்க்கவே இல்லை. அந்த படத்துக்காக நானும் கமல் சாரும் போட்ட உழைப்பு மிகப்பெரியது. படத்தில் பணியாற்றிய பலரது உழைப்பும் படம் வெளியான பிறகு குவிந்த நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக சுக்குநூறாக போய்விட்டது. ஆனால், அது பரவாயில்லை. நிச்சயம் இந்தியன் 3 படம் வெளியானால் ரசிகர்களுக்கு அது பிடிக்கும் என ஷங்கர் பேசியுள்ளார்.

தியேட்டர் ரிலீஸ் தான்:

இந்தியன் 3 திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பொங்கலுக்கு வெளியிடப் போகிறது லைகா நிறுவனம் என வதந்தி ஒன்று தீயாக பரவி வந்த நிலையில், அதெல்லாம் கிடையவே கிடையாது. கண்டிப்பாக இந்தியன் 3 திரைப்படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்றும் ஷங்கர் கூறியுள்ளார்.

ஆபிஸர் vs அரசியல்வாதி:

ராம் சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தையும் ஷங்கர் இயக்கியுள்ளார். அந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அந்த படத்தின் கதை பற்றி கூறிய ஷங்கர் அதிகாரி ஒருவருக்கும் அரசியல்வாதி ஒருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் கேம் சேஞ்சர் என்றார். அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் 1500 கோடி வசூல் வேட்டையை நடத்தியுள்ள நிலையில், கேம் சேஞர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலைத்தான் அடுத்து இந்திய திரையுலகமே எதிர்நோக்கி காத்திருக்கிறது என்கின்றனர்.

shankar game changer indian 3

கம்பேக் ஷங்கர்:

இந்தியன் 2 படத்தில் கம்பேக் இந்தியன் பாடலை ஷங்கர் வைத்திருந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் மூலம் ஷங்கர் கம்பேக் கொடுக்க வேண்டும் என டோலிவுட் ரசிகர்கள் குறிப்பாக ராம் சரண் ரசிகர்கள் கூறி வருகின்றனர். கேம் சேஞ்சர் படத்தின் வெற்றி இந்தியன் 3 படத்துக்கும் அடுத்து ஷங்கர் இயக்க காத்திருக்கும் வேள்பாரி படத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பாடல் ரெடி:

தமன் இசையில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் தோப் பாடம் வரும் 21ம் தேதி அமெரிக்காவின் டல்லாஸில் வெளியாகிறது. இந்திய நேரப்படி டிசம்பர் 23ம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியாகும் என ப்ரோமோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. முதல்வன் படம் போல பக்கா மாஸாக கேம் சேஞ்சர் படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X