சத்தமில்லாமல் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. கம்பீரமாக சுதந்திர தின வாழ்த்து சொல்லும் இந்தியன் தாத்தா!
இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார் .
சென்னை: சுதந்திர தின வாழ்த்துகளோடு இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
லைகா தயாரிப்பில் கமல், ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் இந்தியன் 2. இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாகவுள்ளது.

இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு பிக் பாஸ் முதல் சீசினின் போது வெளிவந்தது. பல மாதங்கள் கழித்து தான் படப்பிடிப்பு தொடங்கியது. பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பிறகு இப்படம் திட்டமிட்டப்படி துவங்குமா எனும் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இப்படத்தின் வேலைகளை கமலும், ஷங்கரும் மீண்டும் ஆரம்பித்துள்ளனர். ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துகளோடுக் கூடிய இந்தியன் 2 போஸ்டரை வெளியிட்டார். இந்த புதிய போஸ்டருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த போஸ்டர் காலையிலேயே டிவிட்டரில் டிரெண்டிங்கானது.
புதிய போஸ்டரின் இந்தியன் தாத்தா கம்பீரமாக நின்று சுதந்திர தின வாழ்த்து கூறுகிறார். அநேகமாக இந்தியன் தாத்தா அடுத்த சுதந்திர தினத்தன்று, தியேட்டரில் வந்தது 'குத்து குத்தினாலும்' ஆச்சரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications











