twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டீசர் லீக் ஆனதால் முன் அறிவிப்பின்றி VFX மேக்கிங் வீடியோ வெளியிட்ட ஷங்கர் #2PointO

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    2.0 டீசர் லீக் உண்மையில்லை- வீடியோ

    சென்னை: ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் '2.O' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் எப்போதோ நிறைவடைந்துவிட்டன.

    '2.ஓ' படத்தின் VFX பணிகளால் படம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதனால், இதற்கு முன்பே 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

    இந்நிலையில் '2.ஓ' படத்தின் VFX மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் நேற்று இரவு வெளியிட்டார்.

    2.ஓ

    2.ஓ

    ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் எமி ஜாக்ஸன் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    VFX பணிகள்

    VFX பணிகள்

    ரூபாய் 400 கோடி செலவில் தற்போது உருவாகி வருகிறது '2.O'. படப்பிடிப்புகள் முடிந்து VFX வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

    டீசர் லீக்

    டீசர் லீக்

    இந்த நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது. இதனால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொபைலில் எடுத்தது

    மொபைலில் எடுத்தது

    லண்டனின் லைகா டெலிகாம் நிறுவனத்தில் தயாரிப்பாளர் தரப்பிற்கு டீசர் போட்டு காட்டும்போது, யாரோ அதை முறைகேடாக செல்போனில் பதிவு செய்து இணையத்தில் லீக் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    VFX மேக்கிங்

    இந்நிலையில் '2.0' படத்தின் கிராஃபிக்ஸ் மேக்கிங் வீடியோவை இயக்குனர் ஷங்கர் நேற்று இரவு வெளியிட்டுள்ளார். '2.ஓ' டீசர் திருட்டுத்தனமாக வெளியானதால் முன் அறிவிப்பின்றி இந்த மேக்கிங் வீடியோவை வெளியிட்டுளார்.

    ட்ரெண்ட்

    ட்ரெண்ட்

    நேற்று வெளியாகியிருக்கும் VFX மேக்கிங் வீடியோவின் மூலம் படக்குழுவின் பிரமாண்டமான உழைப்பு தெரிகிறது. ரஜினி ரசிகர்கள் #2pointO #ChittiIsBack எனும் ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    English summary
    Director Shankar released '2.O' VFX making video on twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X