பெரிய சம்பவம் இருக்கு போல.. இந்தியன் 2வில் குஜராத்தி பேசும் கமல்!

Recommended Video

60 years of Kamal Hassan | Ungal Naan | Shankar | Rajinikanth | Indian 2

சென்னை: திரைத்துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கமல்ஹாசனை பாராட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் 'உங்கள் நான்' எனும் பாராட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஷங்கர் உள்ளிட்ட பல திரைத்துறையை சேர்ந்த ஜாம்பவான்கள், 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலை பாராட்டினார்கள்.

இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் ஷங்கர் கமல் குறித்து பேசும் போது, இந்தியன் 2 படத்தில் கமல் ஒரு புதிய மொழியை பேசியுள்ளார் என்றார்.

இந்தியன் 2

இந்தியன் 2

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஷங்கர் மற்றும் கமல் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தியன் படம் தமிழ் சினிமாவில் வரலாறு காணாத வெற்றியை படைத்த நிலையில், இந்தியன் 2 இன்னும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில், 90 வயது சேனாபதி கதாபாத்திரத்தில் கமல் நடித்து வருகிறார். காஜல், அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இந்தியன் 2வில் நடித்து வருகின்றனர்.

உங்கள் நான்

உங்கள் நான்

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ் திரையுலகமே ஒன்றுகூடி உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மரியாதை செலுத்தியது. இந்த விழாவில் தன்னை செதுக்கிய 60 ஆளுமைகள் குறித்து நடிகர் கமல் கூறினார். கமலுக்காக இசைஞானி இளையராஜா ஸ்பெஷல் கச்சேரி ஒன்றையும் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

என்ன மொழி

என்ன மொழி

'கமல் 60' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். பின்னர், இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், குஜராத் மொழி பேசியுள்ளதாகவும் கூறினார். இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் போபால், குவாலியர் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருவதால், குறிப்பிட்ட சில காட்சிகளில் கமல்ஹாசன் குஜராத் மொழியில் பேசி நடித்துள்ளாராம்.

கமல் அசத்தல்

கமல் அசத்தல்

இயக்குநர் ஷங்கர் கமல், இந்தியன் 2 படத்தில் குஜராத் மொழி பேசியுள்ளதை ரிவீல் செய்த நிலையில், மேடையிலிருந்த கமல்ஹாசன், குஜராத் மொழியில் சில வார்த்தைகளை பேசி அசத்தினார். இந்தியன் படம் தமிழ்நாட்டு அரசியலை பேசிய நிலையில், இந்தியன் 2 படம் இந்தியளவில் அரசியலை பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X