தீபாவளிக்கு ஷங்கரின் ஐ கன்பர்ம்... ஒதுங்கும் மற்ற படங்கள்!

By Shankar

ஒரு வழியாக ஷங்கரின் ஐ படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியிருக்கிறது. வரும் தீபாவளிக்கு இந்தப் படத்தை வெளியிடுகிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் ஐ. தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வந்தது. ரூ 150 கோடியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

விக்ரம் - எமி ஜாக்சன் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லாமல் இருந்தது.

தீபாவளிக்கு

தீபாவளிக்கு

இப்போது படத்தை தீபாவளிக்கு வெளியிட ஆஸ்கர் ரவிச்சந்திரன் முடிவு செய்து, அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

15000 அரங்குகள்

15000 அரங்குகள்

இந்தப் படத்தை ஒரே நேரத்தில் உலகமெங்கும் 15000 அரங்குகளில் வெளியிடப் போவதாக கூறியுள்ளார். சீனாவில் மட்டும் 7000 அரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம்.

சாதனை

சாதனை

இது நிஜமென்றால் உலகில் அதிக அரங்குகளில் வெளியாகும் படம் ஐ -ஆகத்தான் இருக்கும். காரணம், ஹாலிவுட்டின் பிரமாண்ட படங்களான அவதார், ஸ்பைடர் மேன் போன்றவை கூட 14000 அரங்குகளைத் தாண்டவில்லை.

ஒதுங்கல்

ஒதுங்கல்

இந்தப் படம் தீபாவளிக்கு வருவதால் மற்றப் படங்களை வெளியிடும் திட்டத்தை கைவிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள். தீபாவளிக்கு வருவதாக இருந்த விஜய்யின் கத்தி வெளிவருமா என்ற சூழல் உள்ளது.

விஷால் ஒதுங்குவாரா?

விஷால் ஒதுங்குவாரா?

இன்னொரு படம் விஷாலின் பூஜை. ஐ படத்துக்காக இதைத் தள்ளி வைப்பாரா என்பது தெரியவில்லை. காரணம், கடந்த ஆண்டு அஜீத் படத்துடன் தன் பாண்டிய நாட்டையும் மோதவிட்டவர் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X