தீபாவளிக்கு தள்ளிப் போனது ஷங்கரின் ஐ!
மெகா இயக்குநர் ஷங்கரின் ஐ பட வெளியீடு தீபாவளிக்குத் தள்ளிப் போய்விட்டது.
ஷங்கர் இயக்க, விக்ரம் நடித்து வரும் படம் ஐ. ஆஸ்கர் ரவிச்சந்திரன் மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
விக்ரம் ஜோடியாக எமி நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர், பாடல் என எதுவுமே இன்னும் வெளியாகவில்லை.
உண்மையில் படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகிவிடும் என்று கூறி வந்தனர். ஆனால் அப்போது படப்பிடிப்பே முடியாமல் நீண்டு கொண்டிருந்தது.
அடுத்த மாதம், அடுத்த மாதம் என தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. ஆஸ்கர் ரவிச்சந்திரன் இந்தப் படம் தொடர்பான நிதிப் பிரச்சினைகளை ஓரளவுக்கு சமாளித்துவிட்டதால், ரிலீஸ் தேதியை விரைவிலேயே அறிவிக்கவிருக்கிறார்களாம்.
தீபாவளிக்கு ஏற்கெனவே விஷால், விஜய் படங்கள் மோதுகின்றன. அதற்கு முன் கமலின் உத்தம வில்லன் வருகிறது.
இப்போது ஐயும் தீபாவளி ரிலீஸ் என்றால் தியேட்டர்கள் கிடைப்பது பெரும் திண்டாடட்டமாகிவிடுமே என யோசிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.


Click it and Unblock the Notifications












