Don't Miss!
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கப்பல்... ஷங்கர் உதவியாளர் இயக்கும் முதல் படம்!
மெகா இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவரான கிரிஷ் இயக்குநராகிறார், கப்பல் படத்தின் மூலம்.
இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் அடுத்தடுத்து இப்போது இயக்குநர்களாக மாறி வருகிறார்கள்.
சமீபத்தில்தான் ராஜா ராணி மூலம் இயக்குநரானார் அட்லி.
இப்போது மேலும் ஒருவர் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரின் பெயர் கார்த்திக் ஜி.கிரிஷ். ஷங்கரிடம் 'சிவாஜி', 'எந்திரன்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
இவர் இப்போது கப்பல் என்ற படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் லோகோவை அறிமுகப்படுத்திய அவர், "அதில் தெரியும் வண்ணக் கலவை படத்தில் வரும் எண்ணற்ற உணர்ச்சிகளை படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கும்," என்றார்.
மேலும் படத்தின் தலைப்பான 'கப்பல்' கதையின் போக்கையும், கதையில் வரும் கதாபாத்திரங்களின் பயணத்தையும் எதிரொலிக்கும் என்றார்.
இப்படத்தை ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைக்கிறார்.
படத்தின் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.