»   »  ‘எந்திரன் 2 பற்றி இப்போ எதுவும் எழுதாதீங்க..!’

‘எந்திரன் 2 பற்றி இப்போ எதுவும் எழுதாதீங்க..!’

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் கபாலி படப்பிடிப்பில் இருக்கும்போதே, இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கப் போகும் எந்திரன் 2 குறித்து ஏகப்பட்ட செய்திகள் வருகின்றன.

ரஜினிக்கு ஜோடி கத்ரீனா, தீபிகா, இப்போது எமி ஜாக்ஸன் என்று தகவல் வெளியாகி, அவை செய்திகளாகிவிட்டன.

Shankar's appeal to media

அடுத்து, இந்தப் படத்தின் பட்ஜெட், வில்லன் நடிகர் பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் வந்து கொண்டுள்ளன.

ரஜினி படம் என்றாலே இது தவிர்க்க முடியாததுதான் என்றாலும், இந்த விஷயம் ரஜினிக்கும் ஷங்கருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம். படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே எதற்காக இப்படி கற்பனைச் செய்திகளை வெளியிடுகிறார்கள் எனக் கேட்டுள்ளனர்.

Shankar's appeal to media

இதைத் தொடர்ந்து, ‘படம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக நாங்களே தருவோம். அதுவரை படம் குறித்த உறுதிப்படுத்தாத எந்தச் செய்தியையும் வெளியிட வேண்டாம்," என்று மீடியா உலகைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    English summary
    Director Shankar and his team has appealed media not write any unofficial things on Rajinikanth's yet to be announced Enthiran 2.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil