தடா போட்ட ஷங்கர்: கப்சிப்புன்னு இருக்கும் காஜல் அகர்வால்

By Siva

சென்னை: இந்தியன் 2 படம் குறித்து காஜல் அகர்வாலுக்கு ஷங்கர் கன்டிஷன் போட்டுள்ளாராம்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 படம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து வேலை நடக்கவில்லை. அவ்வப்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் படம் கைவிடப்பட்டதாகக் கூட கூறப்பட்டது.

இந்நிலையில் படப்பிடிப்பு ஒரு வழியாக இந்த மாதம் ஹைதராபாத்தில் துவங்க உள்ளது.

காஜல்

காஜல்

இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக காஜல் அகர்வால் களரியும், குதிரையேற்றமும் கற்றுக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு வித்தைகளை கற்பதை பெருமையாக தெரிவித்த காஜல் தனது கதாபாத்திரம் பற்றி மட்டும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார். இந்தியன் 2 படக் கதை, கதாபாத்திரங்கள் குறித்த எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று ஷங்கர் கன்டிஷன் போட்டுள்ளாராம். ஷங்கர் சொன்னால் கேட்காமலா இருக்க முடியும். அதனால் தான் காஜல் அடக்கி வாசிக்கிறார். காஜல் வரும் நவம்பர் மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

காஜல் அகர்வால் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்துள்ள கோமாளி படம் வரும் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. இத்தனை நாட்களாக கோமாளியில் வரும் ஜெயம் ரவியின் வித்தியாசமான கெட்டப்புகள் பற்றி மட்டுமே பேசப்பட்டது. இந்நிலையில் கோமாளி ட்ரெய்லரில் ரஜினிகாந்தை கலாய்த்து காட்சி வைத்ததால் தலைவரின் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். கோமாளி படத்தை புறக்கணிக்குமாறு ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

உலக நாயகன் கமல் ஹாஸனுக்கும் கோமாளி படக்குழு செய்த காரியம் பிடிக்கவில்லை. ரிலீஸுக்கு முன்பு படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளபோதிலும் அதுவும் இலவச விளம்பரமாக அமைந்துவிட்டது. சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிவிட்டனர். மேலும் ரஜினியை கலாய்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2 படங்கள்

2 படங்கள்

ஆகஸ்ட் 15ம் தேதி கோமாளி மட்டும் அல்ல காஜல் அகர்வால் ஷர்வானந்துடன் சேர்ந்து நடித்துள்ள ரணரங்கம் தெலுங்கு படமும் ரிலீஸாக உள்ளது. அந்த படத்தை சுதீர் வர்மா இயக்கியுள்ளார். ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸாவதால் காஜல் அகர்வால் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த ஆண்டு காஜல் நடிப்பில் சீதா தெலுங்கு படம் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. காஜல் வித்தியாசமாக நடித்திருந்த அந்த படம் ஓடவில்லை. இதையடுத்து தான் அவர் கோமாளி மற்றும் ரணரங்கம் ஆகிய படங்களை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X