ஷங்கர் மகளுக்கு பிடித்த நடிகர்.. யாருன்னு அவரே சொல்லியிருக்காரு பாருங்க!

சென்னை : இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டமான படங்களுக்கு சொந்தக்காரர். தற்போது தெலுங்கில் ராம்சரணின் படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்ததாக இந்தியன் 2 படத்தை அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக லைகா தயாரிப்பில் உருவான இந்தப் படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருடைய மகள் அதிதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பிரம்மாண்டங்களின் நாயகன்

பிரம்மாண்டங்களின் நாயகன்

இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டங்களின் நாயகனாக வலம் வருகிறார். எந்த நிலையிலும் தன்னுடைய படங்களில் பிரம்மாண்டத்தை அவர் விட்டுக் கொடுக்க மாட்டார். ஐ, முதல்வன் உள்ளிட்ட படங்கள் இவரது பிரம்மாண்டங்களுக்கு எடுத்துக்காட்டு. தொடர்ந்து இதே வகையில் அவர் படங்களை இயக்கி வருகிறார்.

இந்தியன் 2 படம்

இந்தியன் 2 படம்

கமல்ஹாசனை வைத்து லைகா தயாரிப்பில் இந்தியன் 2 படத்தை அவர் இயக்கிவந்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அவர் ராம்சரணின் ஆர்சி15 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 நாயகியாக அதிதி ஷங்கர்

நாயகியாக அதிதி ஷங்கர்

அடுத்ததாக அவர் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஷங்கரின் மகன் அதிதி ஷங்கரும் தன்னுடைய மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

விருமன் படத்தில் அதிதி

விருமன் படத்தில் அதிதி

தற்போது அவர் கார்த்தியுடன் இணைந்து முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து முடித்துள்ளார். 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் உருவாகியுள்ள இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் கிராமத்து கெட்டப்பில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்துள்ளார்.

அதிதிக்கு பிடித்த நடிகர்

அதிதிக்கு பிடித்த நடிகர்

இந்தப் படத்தின் ட்ரெயிலர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து கெட்டப்பில் கார்த்தி இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அதிதிக்கு பிடித்த நடிகர் குறித்து சமீபத்தில் பேட்டியொன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதிதி கைக்காட்டிய நடிகர்

அதிதி கைக்காட்டிய நடிகர்

இந்தக் கேள்விக்கு அவர் தமிழ் சினிமா ஹீரோக்களை கைக்காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கேஜிஎப் ஹீரோ யஷ் தான் தனக்கு பிடித்தமான நடிகர் என்று தெரிவித்துள்ளார். கேஜிஎப் படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள யஷ், தன்னுடைய மேன்லினெஸ் காரணமாக பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்துள்ளார். இதற்கு சமீபத்திய உதாரணம்தான் அதிதி ஷங்கர்.

 ரசிகர்கள் லைக்ஸ்

ரசிகர்கள் லைக்ஸ்

அதிதி ஷங்கர் ரசிகர்களை கவரும் வித்தையை சரியாகவே தெரிந்து வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஏராளமான ரசிகர்களின் லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X