ஏகப்பட்ட வேலை இருக்கு... தீபாவளிக்கு 'ஐ' வெளிவராதாம்!
ஷங்கரின் ஐ படம் தீபாவளிக்கு நிச்சயம் என்று சொல்லி வந்தவர்கள், இப்போது ஜகா வாங்க ஆரம்பித்துள்ளனர். இப்போதைய நிலவரப்படி ஐ படம் தீபாவளிக்கு வராதாம்.
காரணம் ஒன்று... படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்த ஷங்கர் அன்ட் கோ, இப்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடத்த பிரசாத் லேபில் பிரமாண்ட செட்டுக்குப் போயிருக்கிறாராம். படப்பிடிப்பு முடிய பத்து நாட்களாகுமாம்.
காரணம் இரண்டு, போஸ்ட் புரொடக்ஷன் எனப்படும் பின் தயாரிப்புப் பணிகள் முடிய இன்னும் குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் என்கிறார்கள்.
படத்தில் விக்ரம் அசுரனாகத் தோன்றும் காட்சிகள், முகம் சிதைந்து தோன்றும் காட்சிகளுக்கு இன்னும் ஏகப்பட்ட கிராபிக்ஸ் வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறதாம்.
எனவே தீபாவளிக்கு படம் வெளியிடும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள் தரப்பில். இப்போதைய நிலவரப்படி ஐ நவம்பர் இறுதியில் வரக்கூடும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications












