»   »  உங்க படத்துல நடிக்கணும்... சிவாவுக்கு ஓகே சொன்னாரா ஷங்கர்?

உங்க படத்துல நடிக்கணும்... சிவாவுக்கு ஓகே சொன்னாரா ஷங்கர்?

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

கடந்த வாரம் நடந்த ரெமோ நிகழ்ச்சியை இன்னும் சில மாதங்களுக்கு கூட மறக்காது திரையுலகம். அவ்வளவு பிரம்மாண்டமாக ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு நடந்த விழா ஷங்கரையே பிரமிக்க வைத்துவிட்டது. 'என்னோட 2.ஓ படத்தோட ஆடியோ லாஞ்சை எப்படி நடத்தலாம்னு ஒரு ஐடியா கொடுத்துருக்கீங்க...' என்று புகழ்ந்தார் ஷங்கர்.

அவரிடம் அங்கேயே ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார் சிவா. 'உங்க டைரக்‌ஷன்ல நடிக்கணும் சார்... அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா இதைவிட பிரம்மாண்டத்தை காட்டலாம்...' என்று சிவா கேட்க, ஷங்கர் 'இப்போ என் கவனம் எல்லாம் 2.ஓ மேல மட்டும் தான். அதை முடிக்க இன்னும் 2 வருஷம் ஆகும்.


Shankar's next with Sivakarthikeyan?

முடிச்சதும் கண்டிப்பா பார்க்கலாம்' என்று சொன்னதாக ஒரு தகவல் உலவுகிறது. ஆக, சிவகார்த்திகேயனும் ஷங்கரும் இணைய வாய்ப்பிருக்கிறது.


காமெடியை மட்டுமே தன் பலமாக கொண்டு உள்ளே வந்தார் சிவா. அவர் காமெடி ஹீரோவாக நடித்த படங்கள்தான் நன்றாக ஓடி சிவாவை எண்டெர்டெய்னராக்கின.


ஆனால் அவர் காமெடியை கொஞ்சம் குறைத்து அடுத்தக் கட்டத்துக்கு செல்லலாம் என்று நினைத்த மான் கராத்தே, காக்கிசட்டை படங்கள் பெரிய லாபத்தை தரவில்லை. ஆனால் மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய ரஜினிமுருகன் பெரிய ஹிட்.


இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ரெமோ படம் ஒரு லவ் எண்டெர்டெய்னர் என்றாலும் ரிஸ்க் எடுத்து மேக்கப் எல்லாம் போட்டிருக்கிறார்.


அடுத்து மோகன்ராஜா படத்தில் சீரியஸ் ரோல். அதற்கு அடுத்து இன்று நேற்று நாளை ரவிகுமார். பிறகு தான் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம்.


ஆக, மிக பாதுகாப்பாக அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்க ஆசைப்படுகிறார் சிவா. திட்டம் எல்லாம் ஓகே... ஆனால் தன்னை வளர்த்துவிட்ட காமெடியை கைவிட்டால் கேரியர் காலியாகி விடும் என்பதை மனதில் வைத்துக்கொண்டால் சரி...


டெய்ல் பீஸ் - ஷங்கருக்கு இயல்பிலேயே சிவகார்த்திகேயன் மீது சின்ன பாசம் உண்டு. அது சொந்த ஊர் பாசம். ஷங்கருக்கு சொந்த ஊர் கும்பகோணம். சிவகார்த்திகேயனுக்கு கும்பகோணத்துக்கு அருகே இருக்கும் திருவீழிமிழலை தான் சொந்த ஊர்.

English summary
Recently actor Sivakarthikeyan has approached Director Shankar for a movie in his direction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil