விஜய் சொன்னது போன்று கம்முன்னு இருந்து கைதட்டல் வாங்கிய ஷங்கர்
Recommended Video

சென்னை: ஷங்கர் அமைதியாக இருந்து காரியம் சாதித்துவிட்டார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. ஷங்கர் சும்மாவே பிரமாண்டமாக படம் எடுப்பார், இதில் லைகா தயாரிப்பு வேறு என்றால் சொல்லவா வேண்டாம்.
படத்தை பார்ப்பவர்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

தாமதம்
ஷங்கர் ஒரு படத்தை இயக்கினால் அதை இழுத்தடிக்க மாட்டார். முதலில் பக்காவாக திட்டமிட்ட பிறகே பட வேலைகளை துவங்குவார். ஆனால் 2.0 படம் மட்டும் ஆண்டுக் கணக்கில் இழுத்துக் கொண்டே போனது. இதை பார்த்தவர்கள் இந்த படம் அவ்வளவு தான், ரிலீஸாகாது என்று அவர் காதுபடவே பேசினார்கள்.

ஷங்கர்
தன்னை பற்றியும், தன் படத்தை பற்றியும் பலரும் பலவிதமாக பேசியதை கேட்டு ஷங்கர் கோபப்பட்டு கத்தவில்லை. மாறாக அமைதியாக இருந்தார். தான் பதில் அளிப்பதை விட படத்தை ரிலீஸ் செய்து அதை பார்த்து ரசிகர்களை பிரமிக்க வைப்பதன் மூலம் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து காரியத்தில் கண்ணாக இருந்தார்.

கிண்டல்
கிராபிக்ஸ் பணிகளால் தான் 2.0 படம் இத்தனை ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருந்தது. அதற்கு என்ன பெரிய கிராபிக்ஸாம் என்று பலரும் ஷங்கரை கிண்டல் செய்தார்கள். உசுப்பேத்துறவன்ட உம்முனும், கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்தார் ஷங்கர். அதன் பலன் இன்று கிடைத்து ஜம்முன்னு சிரிக்கிறார் அவர்.

பாராட்டு
விஷுவல் எஃபெக்ட்ஸை பார்த்து வியக்காதவர்களே இல்லை. கிராபிக்ஸ் வேலை என்று ஷங்கர் சொன்னது அப்போ புரியல, இப்போ புரிகிறது என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். படம் நிச்சயம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











