Dhurandhar 2: துரந்தர் 2 படத்திற்கு பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கொடுத்த விமர்சனம்.. அந்த ஒரு பாய்ண்ட்
சென்னை: இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் உருவாகி மார்ச் 19ஆம் தேதி வெளியான படம் துரந்தர் 2. இந்த படம் ஏற்கனவே வெளியான துரந்தர் படத்தின் இரண்டாவது பாகம். ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக திரைத்துறையில் இருந்து பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பாராட்டி பதிவிட்டிருந்தார். ரன்வீர் சிங், மாதவன், ஆதித்ய தார் என மொத்த படக்குழுவினரையும் அல்லு அர்ஜுன் பாராட்டினார். அவரது பதிவில், " ஒரு பக்காவான ஸ்டைல், மாஸ் ஸ்வாக் உடன் நாட்டுப்பற்று கருத்துக்களை துரந்தர் 2 வெளிப்படுத்தி உள்ளது. நடிகர் மாதவனின் அசத்தலான மேலும் கதாபாத்திரத்தை உணரவைக்கும் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். ரன்வீர் சிங் படத்தில் நடித்துள்ள விதத்தைப் பார்த்து பார்த்து மிரண்டு போய் விட்டேன். இயக்குநர் ஆதித்யா தர் நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொருவரையும் பெருமைப்பட வைக்கிற படத்தை நமக்கு கொடுத்துள்ளார். அவரைப் போன்ற இயக்குநர்கள் இந்திய சினிமாவில் இருப்பது ரொம்பவே பெருமைக்குரிய விஷயம் என்று பதிவிட்டுள்ளார்.

ஷங்கர் விமர்சனம்: இப்படி இருக்கையில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், " துரந்தர் 2 படமானது உண்மைச் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் கற்பனையுடன் இவ்வளவு நேர்த்தியாக பின்னிப் பிணைந்திருந்ததைக் பார்ப்பதே ஒரு பிரமிக்க வைக்கும் அனுபவமாக இருந்தது. படம் முழுவதும் நான் மூழ்கிப் போனதால், படத்தின் நீளத்தையே உணரவில்லை. மொத்த படக்குழுவுக்கும் பாராட்டுகள். இயக்குநர் ஆதித்ய தர் தனது அசாத்தியமான இயக்கத்தால் கணிக்க முடியாத திரைக்கதையை அமைத்துள்ளார். காட்சி அமைப்பு, ஷாட்கள், படத்தின் நீளம் என அவர் மிரட்டி விட்டு விட்டார். இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

வரலாற்று தருணம்: ரன்வீர் சிங்கின் வழக்கத்திற்கு மாறான நடிப்பும், அபாரமான திரைப் பிரசன்னமும் பார்ப்பதற்கு மிகவும் நிறைவாக இருந்தது. நடிகர் மாதவன் அவரது நடிப்பு, புதிய மற்றும் பொருத்தமான முக பாவனைகளுடன் நுணுக்கமாக இருந்தது. நடிகர் தேர்வு, படத்திற்கு மேலும் ஒரு யதார்த்தத்தைக் கொடுத்துள்ளது. அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் தங்களின் திறமையை மிஞ்சி பணியாற்றி உள்ளனர். இது நிச்சயமாக இந்திய சினிமாவில் ஒரு வரலாற்றுத் தருணம்" என்று பதிவிட்டுள்ளார். ஒரு புறம் பிரபலங்கள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்தாலும், பிரபலங்கள் சிலர் படத்தை மோசமான படம் என்று விமர்சிக்கவும் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











