பாலிவுட் கவர்ச்சி நாயகியை 2 படங்களுக்கு புக் செய்த ஷங்கர்
சென்னை : இந்திய சினிமாவின் மிகப் பெரிய டைரக்டர்களில் ஒருவரான ஷங்கர், தனது இந்தியன் 2 படத்தை முடிக்க முடியாமல் திணறி வருகிறார். மேக் அப்பில் ஏற்பட்ட தடுமாற்றம், செட்டில் நடந்த விபத்து, கோவிட் 19 லாக்டவுன், கமலின் அரசியல் பிரவேசம் என அடுத்தடுத்து பல தடைகளை சந்தித்து வருகிறார்.
இதற்கிடையில் தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரணின் 15 வது படத்தை, தயாரிப்பாளர் தில் ராஜூவை வைத்து இயக்க போவதாக ஷங்கர் அறிவித்துள்ளார். மெகா பட்ஜெட்டாக உருவாக்கப்பட உள்ள இது தில் ராஜூ தயாரிக்கும் 50 வது படமாகும்.

அத்துடன் ரன்வீர் சிங்கை வைத்து பாலிவுட்டில் புதிய படம் ஒன்றையும் இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இது தமிழில் விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தின் ரீமேக் எனவும், விக்ரம் நடித்த வேடத்தில் தான் ரன்வீர் சிங் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.
இந்த இரு படங்களுக்கும் பாலிவுட் கவர்ச்சி ஹீரோயின் கியாரா அத்வானியை நடிக்க வைக்க ஷங்கர் புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











