இந்தியன் 2 பாட்டுல ஏழரையை கொண்டு வந்ததே ஷங்கர் தான்.. பாடலாசிரியர் சொன்ன பக்கா மேட்டர்!
சென்னை: கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் நடித்து ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியான அனேகன் படத்தில் இடம்பெற்ற "டங்காமாரி ஊதாறி" பாடலை எழுதி பிரபலமானவர் தான் பாடலாசிரியர் ரோகேஷ். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தில் அனிருத் இசையில் உருவான "கதறல்ஸ்" பாடலுக்கு இவர் தான் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
கதறல்ஸ் பாடல் உருவான விதம். அந்த பாடலில் "தாத்தா வராரு.. கதறவிடப் போறாரு" வரிகள் வந்த கதை என அனைத்தையும் தனது புதிய பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

லிரிக் வீடியோ இல்லாமல் மொத்த ஆல்பமாக அந்த பாடல் வெளியான நிலையில், சோஷியல் மீடியாவில் அந்த பாடல் தான் தற்போது வேறலெவல் டிரெண்டாகி வருகிறது. மோடியின் வெற்றிக்கும் அந்த பாடலை பாஜகவினர் பயன்படுத்தி வருவது குறித்த கேள்விக்கும் ரோகேஷ் பதிலளித்துள்ளார்.
இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை: இந்தியன் படம் ரிலீஸ் ஆன வருடத்தில் தான் நான் பிறந்தேன். ஷங்கர் சார் ஒரு முறை என்னோட டேட் ஆஃப் பர்த் கேட்கும் போது சொன்னேன். அப்போ தான் நான் இந்தியன் படத்தை இயக்கி ரிலீஸ் செய்தேன் என்றார். எனக்கு அவ்ளோ ஹேப்பியா இருந்தது. ஆரம்பத்தில் ஷங்கர் சார் அழைத்து வரச் சொன்னதாக கூறியதும் இந்தியன் 2 படத்துல நமக்கு என்ன வேலை இருக்கப் போகுது என்று தான் நினைத்தேன். ஆனால், "கதறல்ஸ்" பாடலுக்கான இடத்தை ஷங்கர் சார் அழகாக உருவாக்கி இருந்தார். படத்துடன் பார்க்கும் போது அனைத்து ரசிகர்களுக்கும் அது ரொம்பவே பிடிக்கும் என்றார்.

ஏழரையை கொண்டு வந்த ஷங்கர்: இந்தியன் 2 படத்தில் 7 மணிக்கு இந்தியன் தாத்தா ஊழல்வாதிகளை சம்ஹாரம் செய்வார் என தெளிவாக தெரிகிறது. அந்த பாடலில் தாத்தா வராரு கதற விடப் போறாரு.. 7 மணிக்கு வராரு.. ஏழரை தரப் போறாரு என்கிற வரிகள் உருவாக ஷங்கர் தான் காரணம். அவர் தான் இப்படியொரு மேட்டர் இருக்கு என தன்னிடம் விவரித்தது பற்றியும் ரோகேஷ் கூறியுள்ளார். நாளை அந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகிறது. பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற "மாரோ மாரோ" பாடல் போல அந்த பாடல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மோடிக்கான பாடல்: இந்தியன் தாத்தாவுக்கான பாடலாகத்தான் நான் எழுதியிருந்தேன். ஆனால், அது ரிலீஸ் ஆன நேரத்தில் எதிர்பாராத விதமாக வேறு தாத்தாவுக்கான பாடலாக ரசிகர்கள் அரசியல் பிரச்சார பாடலாகவே இதை மாற்றி விட்டனர் என்றும் ரோகேஷ் பேசியுள்ளார். "டங்காமாரி" பாட்டு ஹிட் ஆனதும் தனுஷ் போன் செய்து பாராட்டினார். உடனடியாக சிம்புவும் போன் செய்து பாராட்டியதும் ரொம்பவே ஹேப்பியாகி விட்டேன். கதறல்ஸ் பாடல் ஷங்கர் சாருக்கு ரொம்பவே பிடித்த பாடல். நிச்சயம் தியேட்டரில் அது செம சம்பவம் செய்யும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











