இயக்குநரா? ஹீரோவா? குழப்பத்தில் ஷங்கர் மகன்.. விஜய் மகன் படத்தில் அறிமுகமானால் எப்படி இருக்கும்?

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில், சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டார். அதிதி ஷங்கர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் அறிமுகமாகி அடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் ஹீரோயினாக நடித்தார்.

அடுத்ததாக அதர்வா தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நடித்து வரும் நேசிப்பாயா படத்திலும் அர்ஜுன் தாஸுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சில படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார்.

Shankar Arjith Shankar Jason Sanjay

இந்நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் அக்கா ஐஸ்வர்யாவின் திருமணத்தில் ரன்வீர் சிங் மற்றும் அட்லீயுடன் நடனமாடினார். இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துடன் செம குத்தாட்டம் போட்டிருந்தார். அடுத்து அவரும் சினிமாவில் அறிமுகமாக காத்திருக்கிறார்.

பிரம்மாண்ட இயக்குநர்: இந்திய சினிமாவையே தனது பிரம்மாண்ட படங்கள் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இயக்குநர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தில் ஆரம்பித்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 என பல படங்களை இயக்கியுள்ள ஷங்கர் அடுத்ததாக தனது மகனையும் சினிமாவில் களமிறக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

Shankar Arjith Shankar Jason Sanjay

ஹீரோவா? இயக்குநரா?: தனது மகன் அர்ஜித் ஷங்கரை சினிமாவுக்குத் தந்து விட்டதாகவும், அவர் ஹீரோவாக விரும்புகிறாரா? அல்லது இயக்குநராக போகிறாரா? என்பது தெரியவில்லை என்றும் அவருக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அப்பா படத்தில் மகன்?: மகள் அதிதி ஷங்கருக்கு வாய்ப்புக் கொடுக்காததை போல தனது படத்தில் ஷங்கர் மகனுக்கும் வாய்ப்புக் கொடுத்து அறிமுகப்படுத்த மாட்டார் என்றே தெரிகிறது. சொந்த தயாரிப்பில் மகனை வைத்து படம் எடுப்பாரா? என்றும் இல்லை அப்பாவை போல இயக்குநராக போகிறாரா? ஏன் இந்த குழப்பம் என்கிற கேள்வியை சினிமா வட்டாரத்தில் பலர் எழுப்பி வருகின்றனர்.

Shankar Arjith Shankar Jason Sanjay

விஜய் மகன் இயக்கத்தில்: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக லைகா தயாரிப்பில் அறிமுகமாகவுள்ள நிலையில், அவருடைய படத்தில் ஹீரோவாக அர்ஜித் ஷங்கர் நடித்து அறிமுகமானால் எப்படி இருக்கும் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். விரைவில் அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக போகிறாரா? அல்லது இயக்குநர் ஆகப் போகிறாரா? என்பதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான ட்ரோல்கள்: இயக்குநர் ஷங்கரை இதுவரை இல்லாத அளவுக்கு சினிமா வட்டாரத்தில் பலரும் இந்தியன் 2 படத்திற்கு பிறகு ட்ரோல் செய்து வருகின்றனர். லஞ்சத்தை ஒழிக்க முடிவு செய்த இந்தியன் தாத்தா போலி பாஸ்போர்ட் கேட்டு இந்தியா வருவது ஏன்? உள்ளிட்ட ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கி இந்தியன் எனும் எவர்க்ரீன் கிளாஸிக் படத்தை ஷங்கர் தனது சுயநலத்திற்காக கெடுத்து விட்டார் என்று கூறுகின்றனர்.

இந்தியன் 3 வெளியாகுமா?: லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்திற்கு தொடர்ந்து முட்டுக் கொடுத்து வரும் நிலையில், கமல்ஹாசன் கேட்டுக் கொண்டதை போல மேலும், சில நாட்கள் செலவு செய்து படப்பிடிப்பை நடத்தி இந்தியன் 3 படத்தை வெளியிடுவார்களா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X