அடுத்த பட வேலையை ஆரம்பித்தார் ஷங்கர் - ஹீரோ யார்?

முக்கியமாக ஹீரோ யார் என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. ஏற்கெனவே ரஜினியுடன் இணைந்து அவர் எந்திரன் 2 படத்தை உருவாக்குவார் என்று கூறப்பட்டது.
இல்லையில்லை... ஊழல் ஒழிப்பை மையப்படுத்தி அவர் எடுக்கும் இந்தியன் 2 படத்தில் இந்த முறை ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இன்னும் சிலர் அஜீத்தை வைத்து எடுப்பார் என்றும் கூறினர்.
ஆனால் சமீபத்தில் தனது பேட்டிகளில் கமல் அல்லது ரஜினியை வைத்து புதிய படம் செய்வு குறித்து யூகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனது அடுத்த படத்தின் கதை - திரைக்கதை பணியை ஆரம்பித்துவிட்டதாகவும், ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தனது வலைப் பக்கத்தில் எழுதியுள்ளார் ஷங்கர்.
Comments


Click it and Unblock the Notifications