சிறையில் பவர் ஸ்டார்: ‘ஐ’ டப்பிங் என்னவாகும் யோசனையில் ஷங்கர்

By Mayura Akilan

மோசடி வழக்கில் கைதாகி பவர்ஸ்டார் சீனிவாசன் சிறைக்குப் போனாலும் போனார் இயக்குநர் ஷங்கர் கூட டப்பிங் பேச ஆளில்லாமல் திண்டாடி வருகிறாராம்.

அடுத்தடுத்து மோசடி வழக்குகள் பவர்மீது விழவே, ஒரேடியாக ஜெயிலில்தான் இனி சூட்டிங் நடத்தவேண்டுமே என்கிற ரேஞ்சுக்கு ஆகிவிட்டது.

இதனால் பவர் பீஸ் போன பல்பாகிவிட்டார் என்கின்றனர் கோடம்பாக்கத்தில். இதனால் திகிலடித்துப் போயுள்ளனர் ஷங்கர், ராமநாராயணன் போன்ற இயக்குநர்கள்.

ஷங்கர் – ராமநாராயணன்

ஷங்கர் – ராமநாராயணன்

பவர் ஸ்டார் திடீரென கைதானதில் அவரைவிட அதிர்ச்சியில் உறைந்து போனவர்கள் இருவர்! ஒருவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், இன்னொருவர் ராம நாராயணன்!

‘ஐ’ படத்தில்

‘ஐ’ படத்தில்

முதலில், சீனிவாசன் கொஞ்சம் பந்தா பேர்வழி என்றுதான் ஷங்கர் நினைத்து இருந்தார். அவரால் ‘ஐ' படத்துக்கு எந்த பிரச்னையும் வராது' என்கிற மனோபாவத்தில் சீனிவாசனை ஒப்பந்தம் செய்தார். ஒருவழியாக சீனி நடிக்கும் காட்சிகளை எல்லாம் படமாக்கி விட்டார்.

ஆள் கிடைக்கலையே

ஆள் கிடைக்கலையே

டப்பிங் வேலை முடியும் முன்னரே கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார், சீனி! பிரபலமான நடிகர்களின் குரல் என்றால் யாராவது மிமிக்ரி செய்பவர்களை கொண்டு பேசிவிடலாம். பவர் ஸ்டார் குரலில் பேசுவது சிரமமாக இருப்பதாக சொல்கிறார்கள்!

ஆர்யா - சூர்யா

ஆர்யா - சூர்யா

அடுத்து, ராம நாராயணன் கதிதான் அதோகதி! ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்துக்கு மானாவாரியாக கமர்ஷியல் ரிசல்ட் வரும்போதே படக்கென்று பவர் ஸ்டாரை தனது அடுத்த புதுப்படத்துக்கு ஒப்பந்தம் செய்தார் ராமநாராயணன்.

அந்த படத்துக்கு முதலில் ‘நான் சரக்கு நீ ஊறுகாய்' என்று டைட்டிலும் வைத்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, இப்போது ‘ஆர்யா சூர்யா' என்று பேர் மாற்றியிருக்கிறார்!

பிசினெஸ் என்னவாகும்

பிசினெஸ் என்னவாகும்

இப்போது திடீரென பவர் ஸ்டார் கைதானதில், திகைப்பில் திக்குமுக்காடி போயிருக்கிறார் நாராயணன்! ஏப்ரல் கடைசி வாரத்தில் ‘ஆர்யா சூர்யா' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார். இப்போது படத்தின் மொத்த பிசினஸும் என்ன ஆகப்போகிறதோ என்கிற பதற்றத்தில் தவித்து வருகிறார், ராம நாராயணன்!

நண்பர்கள்தான் காரணம்

நண்பர்கள்தான் காரணம்

ஆனால் தன்மீது மோசடி புகார்கள் வரக்காரணம் நண்பர்களின் நம்பிக்கைத் துரோகம்தான் என்று கூறியுள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

ஆனால் டாக்டருக்கு தனிப்பட்ட முறையில், தொழிலில், சினிமாவில் என்று ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் அவர் யாரை குறிப்பிட்டு சொல்கிறார் என்றுதான் தெரியவில்லை'' என்று கையை விரிக்கிறார்கள் அவருடன் நிழலாக இருந்தவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X