அர்னால்ட்- ரஜினிக்கு நன்றி தெரிவித்தார் ஷங்கர்
ஐ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர், ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.
ஷங்கர் தயாரிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ'. இதில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

படப்பிடிப்பு முடிந்தது
இரண்டரை வருடத்திற்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது.

அர்னால்ட்
சமீபத்தில் ஐ படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கள் பிரம்மாண்டமாக விழா நடத்தி வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அர்னால்டு பங்கேற்றார். இவ்விழாவில் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்க விரும்புவதாக அர்னால்டு கூறியிருந்தார். நேரமின்மை காரணமாக பாதியில் கிளம்பினார்.

ரஜினி
இந்த விழாவில் கடைசி வரை இருந்து பாடல்களை வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தினார் ரஜினி. கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரும் கலந்துகொண்டனர்.

நன்றி
இவ்விழாவில் அர்னால்டு கலந்து கொண்டதற்கும், சிறப்பாக பேசியதற்கும் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

எப்போதும் என்னுடன் ரஜினி
மேலும் தனது திரையுலக வாழ்க்கையின் அனைத்து முக்கியமான தருணங்களிலும் தன்னுடன் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

60 லட்சம்
இதுவரை ஐ டீசரை மட்டும் யூடியூபில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். தமிழ் சினிமாவில் இதுவும் ஒரு சாதனைதான்.


Click it and Unblock the Notifications











