ஷங்கரின் 'ஐ' தெலுங்கில் 'ஹேன்ட்ஸம் கய்'!

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில் மென் இன் பிளாக் சீரிஸ் படங்களில் பணிபுரிந்த மேரி வாட், கதாபாத்திரங்களுக்கு பிரத்யேகமான உடைகளை வடிவமைக்கிறார்.
ஹாரிபாட்டர் சீரிஸ் படங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரைசிங் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் பகுதிகளை அமைக்கிறது. ஹாலிவுட் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்களும் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள்.
சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவைச் சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள். இந்த ரொமான்ட்டிக் த்ரில்லர் படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
இந்தப் படத்தில் காமெடிக்கும் பஞ்சமில்லை. பவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசனை வைத்து சில ஸ்பூப் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்!


Click it and Unblock the Notifications











