பிரபல தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை.. தெலுங்கு ஹீரோவை இயக்குகிறார் 'பிரம்மாண்ட' ஷங்கர்?

By

சென்னை: இயக்குனர் ஷங்கர், அடுத்து பிரபல தெலுங்கு ஹீரோவை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், இப்போது 'இந்தியன் 2' படத்தை இயக்கி வருகிறார்.

கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து, 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, நெடுமுடி வேணு, கவுண்டமணி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அதன் இரண்டாம் பாகத்தில் சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஈவிபி பிலிம்சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் அதிகரித்தது.

வரலாற்றுப் படம்

வரலாற்றுப் படம்

இதனால், ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்னும் தொடங்கப் படவில்லை. இந்நிலையில், இயக்குனர் ஷங்கர், வரலாற்றுப் படம் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

5 மொழி நடிகர்கள்

5 மொழி நடிகர்கள்

போர்க்காட்சிகளை கொண்ட இந்தப் படம், பான் இந்தியா படமாக உருவாகிறது என்றும் இதில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம், இந்தி மொழி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கன்னட ஹீரோ யஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது.

ராம் சரண் தேஜா

ராம் சரண் தேஜா

இந்நிலையில் அவர் பிரபல தெலுங்கு ஹீரோ, ராம் சரண் தேஜாவை இயக்க இருப்பதாகவும் மெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியன் 2 படத்தை தயாரிக்க, முதலில் இவரிடம்தான் கேட்கப்பட்டது.

தயாரிப்பாளர் தில் ராஜூ

தயாரிப்பாளர் தில் ராஜூ

அப்போதைய சூழலில் அந்தப் படத்தை தயாரிக்க முடியாததால், லைகா தயாரித்தது. இந்நிலையில் தில் ராஜூ இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார். இதற்காக தில் ராஜூ, இயக்குனரை சென்னையில் சந்தித்து பேசி இருப்பதாகவும் விரைவில் தனது முடிவை சொல்வதாக இயக்குனர் ஷங்கர் கூறியதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X