'ஆல் இஸ் வெல்'.. மீண்டும் விஜய் படம்.. இயக்குனர் ஷங்கர் சூசக பதில்!
விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்க தயாராக இருப்பதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்குவது குறித்த கேள்விக்கு இயக்குனர் ஷங்கர் பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்த்த கூட்டணிகளில் ஒன்று விஜய் - ஷங்கர் கூட்டணி. முதல்வன் படத்திலேயே அமைந்திருக்க வேண்டிய இந்த கூட்டணி 2012ம் ஆண்டு வெளியான 'நண்பன்' படத்தில் தான் சாத்தியமானது.

ஆனால் அது நேரடி தமிழ் படம் இல்லை. இந்தியின் மெகா ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் தான் அது. இதனால் அவர்கள் இருவரும் ஒரு ஒரிஜினல் படத்தில் சேர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த சூழலில் தனியார் இணையதளம் நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கரிடம், "விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்குவீர்களா?", என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷங்கர், தானும் தயார், விஜய்யும் தயார் என்றார். தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
ஷங்கரின் இந்த பதிலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே ஷங்கரும், விஜய்யும் மீண்டும் இணையப் போவதாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் ஷங்கரின் பதில், அந்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அடுத்த ஆண்டு வரை இந்த படத்திற்கான வேலைகள் தொடரும் என்றே தெரிகிறது. எனவே விஜய் - ஷங்கர் இணைவது 2021ல் சாத்தியமாகும் என்று தோன்றுகிறது. விஜய்யும் அதற்குள்ளாக தளபதி 64, தளபதி 65 ஆகிய படங்களை முடித்திருக்கக்கூடும். தளபதி 65 படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக கூறப்படுவதும் கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











