யஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?

By

சென்னை: இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்துக்குப் பிறகு வரலாற்றுப் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து, 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'.

மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, நெடுமுடி வேணு, கவுண்டமணி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

பிரியா பவானி

பிரியா பவானி

இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது.

கிரேன் அறுந்து

கிரேன் அறுந்து

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஈவிபி பிலிம்சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது, ராட்சத கிரேன் அறுந்து கீழே விழுந்தது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மீண்டும் படப்பிடிப்பு

மீண்டும் படப்பிடிப்பு


பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக, ஷூட்டிங் தடைபட்டது. பல மாதங்களுக்குப் பிறகு படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங், அடுத்த மாதம் சென்னையில் மீண்டும் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரலாற்றுப் படம்

வரலாற்றுப் படம்

இதற்கிடையே இயக்குனர் ஷங்கர், இந்தப் படத்தை அடுத்து வரலாற்றுப் படம் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போர்க்காட்சிகளை கொண்ட இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம், இந்தி மொழி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர்.

அடுத்த வருடம்

அடுத்த வருடம்

கன்னட ஹீரோ யஷ் இதில் நடிக்க இருக்கிறாராம். இந்தியன் 2 படத்தை 60 சதவிகிதம் முடித்துவிட்ட இயக்குனர் ஷங்கர், அடுத்த வருட தொடக்கத்தில் இந்த வரலாற்றுக் கதையை படமாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி
ஷங்கர் தரப்பில் அதிகாரபூர்வமான தகவல் ஏதுமில்லை.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

சமீபகாலமாக, இயக்குனர்கள் வரலாறு மற்றும் புராணப் படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் ராஜமவுலி 'ஆர்ஆர்ஆர்' என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் சில வரலாற்றுக் கதைகளை கொண்ட படங்கள் உருவாகியுள்ளன. புராணப் படங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X