இதுதான் '2.O' கதை - மறைமுகமாகச் சொன்ன இயக்குநர் ஷங்கர்!
Recommended Video

சென்னை : '2.ஓ' படத்தின் கதையைப் பற்றி படத்தின் இயக்குநர் ஷங்கர் மேலோட்டமாகத் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் '2.O' படத்தின் கதை இதுதான் எனக் கூறியுள்ளார் ஷங்கர்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.O' படத்தைத் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கொண்டிருக்கிறது. படம் ஹாலிவுட் தரத்திற்கு நிகராகத் தயாராகிவருவதாகக் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடிப்பில் ஷங்கர் இயக்கும் '2.O' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நேற்று நள்ளிரவு துபாயில் நடந்த பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டன.
படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் நிலையில் இரண்டு பாடல்கள் மட்டுமே தற்போது வெளிவந்துள்ளன. இந்தப் பாடல்கள் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகின்றன.
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் நிலையில், இந்தப் படத்தின் கதை பற்றி இயக்குநர் ஷங்கர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
எந்திரன் படத்தில் ஒரு மெஷினுக்கு பெண் மேல் ஏற்படும் காதல் அதனால் வரும் பிரச்னைகள் பற்றிக் கூறப்பட்டிருக்கும். அது போல '2.O' -வில் ஒரு மெஷினுக்கும் இன்னொரு மெஷினுக்குமான காதல் இருக்கும் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











