»   »  மனோகருடு இசை வெளியீட்டு விழாவில் நிறைவேறாத ஆசையை தெரிவித்த ஷங்கர்

மனோகருடு இசை வெளியீட்டு விழாவில் நிறைவேறாத ஆசையை தெரிவித்த ஷங்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: விரைவில் தெலுங்கு படம் ஒன்றை இயக்கப் போவதாக மனோகருடு அதாவது ஐ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஐ படம் தெலுங்கில் மனோகருடு என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மனோகருடு படத்தின் இசை வெளியீட்டு விழாவை தமிழை போன்றே பிரமாண்டமாக நடத்த ஷங்கர் திட்டமிட்டார்.

மனோகருடு விழாவில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் அல்லது நடிகர் சில்வெஸ்டர் ஸ்டலோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

இசை வெளியீடு

இசை வெளியீடு

மனோகருடு இசை வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் மிகவும் எளிமையாக நடந்தது. விழாவுக்கு ஜாக்கி சானோ, ஸ்டலோனோ வரவில்லை.

ராஜமவுலி

ராஜமவுலி

இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு இயக்குனர்களான ராஜமவுலி, த்ரிவிக்ரம் சீனிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹீரோ விக்ரமும் கலந்து கொண்டார்.

காதலன்

காதலன்

ஷங்கரின் காதலன் படம் ரிலீஸானபோது நான் உதவி இயக்குனராக இருந்தேன். அந்த படத்தில் முக்காலா பாடலில் கண்ணுக்கு தெரியாத பிரபுதேவாவை எப்படி படமாக்கினார் என்று வியந்தோம். தற்போது நான் முன்னணி இயக்குனராக உள்ளேன். இந்நிலையில் ஐ படத்தின் ட்ரெய்லரை பார்த்து ஷங்கர் ஒவ்வொரு ஃபிரேமையும் எப்படி படமாக்கினார் என்று வியக்கிறேன் என்றார் ராஜமவுலி.

பாகுபலி

பாகுபலி

ராஜமவுலியின் மகதீரா படத்தை பார்த்து அவரது ரசிகன் ஆனேன். அவரின் நான் ஈ படத்தை பார்த்த பிறகு அவரை மேலும் பிடித்துவிட்டது. அவர் இயக்கி வரும் பாகுபலி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார் ஷங்கர்.

தெலுங்கு படம்

தெலுங்கு படம்

நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கும் ஆசை வெகுகாலமாக உள்ளது. ஆனால் அந்த ஆசை சில காரணங்களால் நிறைவேறாமல் உள்ளது. விரைவில் நான் தெலுங்கு படம் ஒன்றை இயக்குவேன் என்று ஷங்கர் தெரிவித்தார்.

English summary
Manoharudu music launch function was held in Hyderabad sans Jackie Chan and Stallone.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil