2.0 ஷூட்டிங்.. ரஜினி முன்னிலையில் பூசணிக்காய் உடைத்து நிறைவு செய்தனர்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பிரமாண்ட படமான 2.0-ன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. ரஜினி முன்னிலையில் பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை நிறைவு செய்தார் இயக்குநர் ஷங்கர்.
லைகா நிறுவனத்தின் ரூ 400 கோடி பட்ஜெட் படம் 2.0. திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 3டி கேமிராவில் படமாக்கப்பட்டுள்ள படம் இதுதான்.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் அனைத்துப் படப்பிடிப்பு பணிகளும் நேற்றுடன் நிறைவடைந்தன. பூந்தமல்லி அருகில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் வைத்து இதன் இறுதிக் காட்சி படமாக்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு முடிந்ததும் திரையுலக வழக்கப்படி பூசணிக்காய் உடைத்தனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை (அக் 27) துபாயில் பிரமாண்டமாக நடக்கிறது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் 2.0 பட பாடல்களை லைவாக தன் குழுவினருடன் இசைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











