தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜரகண்டி பாடல் நேற்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. தமன் இசையில் உருவான அந்த பாடல் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் டிரெண்டான அளவுக்கு தமிழில் கவனம் ஈர்க்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக எந்திரன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்னர் விஜய் நடித்து வெளியான நண்பன், சியான் விக்ரம் உயிரை கொடுத்து நடித்த ஐ, ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்த 2.0 படங்கள் விமர்சன ரீதியாக பெரிதாக போகவில்லை. இந்தியன் 2 படத்துடன் சேர்த்து தற்போது கேம் சேஞ்சர் படத்தையும் உருவாக்கியுள்ள ஷங்கர் கம்பேக் கொடுப்பாரா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Shankar s Game Changer first single Jaragandi getting poor views in Tamil

ராஜமெளலி ஓவர்டேக்: இந்தியாவிலேயே பிரம்மாண்ட இயக்குநராக ஷங்கர் இருந்து வந்த நிலையில், தற்போது அந்த பெயருக்கு சொந்தக்காரராக ராஜமெளலி மாறியுள்ளார். ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தைக் கொடுத்து 1100 கோடி வசூலை சாத்தியமாக்கி உள்ளார்.ஷங்கர் இன்னமும் 1000 கோடி வசூலை சாத்தியமாக்கவில்லை.

ஜரகண்டி பாடல்: இன்னமும் ஷங்கர் திருந்தல மாமா என ரசிகர்கள் கலாய்க்கும் விதமாகவே ஒரு ஊரையே செட் போட்டு கலர் பெயின்ட் அடித்து ராம்சரண், கியாரா அத்வானியை ஆட வைத்திருக்கிறார். அந்நியன் படத்தில் இடம்பெற்ற "அண்டங்காக்கா கொண்டக்காரி" பாடல் மாதிரியே இருக்கு என ட்ரோல் செய்து வருகின்றனர்.

4 மில்லியன் வியூஸ்: ராம்சரண் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு தெலுங்கில் வெளியான 'ஜரகண்டி' பாடல் 24 மணி நேரத்தில் வெறும் 4 மில்லியன் வியூஸ் தான் அள்ளியிருக்கிறது. 10 மில்லியன் வியூஸ் கூட பெறவில்லை. தெலுங்கிலேயே இந்த நிலை என்றால் தமிழில் கொஞ்சம் கூட வியாபாரமே ஆகவில்லை.

5 லட்சம் மட்டுமே: ஷங்கர், பிரபுதேவா என தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பணியாற்றிய ராம்சரணின் ஜரகண்டி பாடலின் தமிழ் வெர்ஷனை இதுவரை வெறும் 5 லட்சம் ரசிகர்கள் தான் பார்த்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் அறிமுக டீசரும் பெரிதாக ரசிகர்களை கவராத நிலையில், ஜரகண்டி பாடலும் சறுக்கி விட்டது சினிமா உலகையே ஷாக் ஆக்கி உள்ளது.

சந்திராயன் முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் வரை: லிரிக்ஸும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் விவேக் 'ஜரகண்டி' தமிழ் வெர்ஷனுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். சந்திராயன், சூப்பர் சோனிக், சிக்ஸ்பேக் எமன், சர்ஜிக்கல் ஸ்டிரைக், டிரோன் அட்டாக் என ஏதோ சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்துக்கான பாடல் போலவே கேம் சேஞ்சர் படத்தின் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. எந்தவொரு வரியும் ரசிகர்களை கனெக்ட் செய்யாத நிலையில், முணுமுணுக்கும் பாடலாகவும் இல்லை என்றே பலரும் கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை கழுவி ஊற்றி வருகின்றனர். ஒரு காலத்தில் "பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்" என அத்தனை அதிசயங்களையும் காட்டிய ஷங்கருக்கே இந்த நிலைமையா? என ஏகப்பட்ட ட்ரோல்கள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X