Game Changer Review: ஷங்கருக்கு என்ன ஆச்சு..சோலி முடிஞ்சு..செய்யாறு பாலுவின் விமர்சனம்!
சென்னை:ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி, ராம்சரண்,எஸ்ஜேசூர்யா, சமுத்திரகனி, சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் கேம் சேஞ்சர் படம் பார்த்த பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு படம் குறித்து தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில்,நேர்மையான ஒரு ஐஏஎஸ் அதிகாரியான ராம்சரணுக்கும், படுமோசமான ஒரு அரசியல்வாதியான எஸ்.ஜே.சூர்யா அவர்களுக்கும் நடக்கும் சண்டை தான் கேம் சேஞ்சர் படத்தின் ஒன் லைன் கதை. இந்த படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புதிதாக எதுவுமே இல்லை. முதல்வன், ஜென்டில்மேன், இந்தியன் என ஷங்கரின் பல படத்தின் கதைகளை ஒன்றாக ஒரு சட்டியில் போட்டு உருட்டி கலவை சாதமாக கேம் சேஞ்சர் என்கிற பெயரில் கொடுத்து இருக்கிறார் சங்கர். இந்த கலவை சாதத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களான என்பது தெரியவில்லை.

படத்தின் கதை என்னவென்றால், முதல்வரின் மகனாக எஸ்.ஜே.சூர்யா படுமோசமான அரசியல்வாதியாக இருந்து கொண்டு, கொள்ளை, கொலைகளை செய்து வருகிறார். ஆனால் முதல்வர், இத்தனை ஆண்டுகள் பாவங்கள் செய்து விட்டோம். இனி மேலாவது மக்களுக்கு நல்லது செய்வோம் என்று மகன் எஸ்ஜே சூர்யாவை கட்டுப்படுத்துகிறார். ஆனால், அவர் அப்பாவின் பேச்சைக் கேட்காமல் மணல், கொள்ளை, அடிதடி என அதே வேலையை செய்து வருகிறார். இது முதல்வருக்கு தெரியவர, அவர் போலீசுக்கு போய்விடுவார் என்பதால், முதல்வரான தனது அப்பாவை தீர்த்து கட்டி விட்டு, அந்த இடத்திற்கு வருகிறார் எஸ்ஜே சூர்யா அதன் பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.
இடைவேளை வரை படத்தை ஏதோ ஒப்பேற்றி சென்று விட்டார். ஆனால், இன்டர்வெலுக்கு பிறகு கதை எதிலும் ஒட்டவே இல்லை. படத்தை பார்க்கும் போது, சிவாஜி படமும், விஜயகாந்த் நடித்த தென்னவன் திரைப்படமும் நினைவிற்கு வருகிறது. படத்தில் எந்த இடத்திலும் கூஸ்பம்ஸ் காட்சிகள் இல்லாமல் படம் சப் என்று சென்று கொண்டிருக்கிறது. படத்தின் கதை, பழைய கதையாக இருந்தாலும், ஒரு பத்து சீன், தெறிக்கும் காட்சியாக இருந்து இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், படத்தில் ஒன்றுமே இல்லை. அதுமட்டுமல்லாமல் படம் 2.45 நிமிடமாக இருந்ததால், ஒரு கட்டத்தில் படம் பார்ப்பவர்களுக்கு அலுப்பு தட்டி தூக்கமே வந்துவிட்டது.
ஷங்கருக்கு என்னாச்சு: ஜருகண்டி பாடல் மிகவும் பிரம்மாண்டமாக ரசிக்கும்படி இருக்கிறது. அந்த பாடலுக்கு மட்டும் 65 கோடி செலவாகி உள்ளது. மொத்த படத்திற்கும் சுமார் 500கோடியாவது செலவாகி இருக்கும். வழக்கமாக ஷங்கர் படத்தின் வசனம் ரசிக்கும்படி இருக்கும். ஆனால், இந்த படத்தில் வசனம் கூட பழசாகத்தான் இருக்கிறது. அதேபோல எஸ்.ஜே.சூர்யா, ஏன் கத்துகிறார், எதற்கு கத்துகிறார் என்று தெரியாத அளவிற்கு படம் முழுக்க கத்திக்கிட்டே இருக்கிறார்.
பெரிய குறை : இந்த படத்தை பார்க்கும் போது, ஷங்கருக்கு என்ன ஆச்சு, எதற்கு திரைக்கதையில் இவ்வளவு பெரிய ஓட்டை என்று தான் கேட்க தோன்றுகிறது. தமிழ் நாட்டில் திரைக்கதை ஆசிரியர்களுக்காக பஞ்சம், ஈகோ ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, திரைக்கதை ஆசியர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த பட கதையை உருட்டி வேறுவிதமாக ஆக்கி இருக்கலாமே. ஷங்கரின் படங்களுக்கு வலது கரமாக, சங்கரின் படங்களுக்கு துணையாக இருந்த எழுத்தாளர் சுஜாதா இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. இது இந்த படத்தில் அப்பட்டமாக தெரிகிறது என பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியுள்ளர்.


Click it and Unblock the Notifications











