அஜித்துடன் மோதும் ஷங்கர்.. அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் தலைவலி.. இதெல்லாம் நியாயமா பாஸ்!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்கள் பொங்கல் ரிலீசை குறி வைத்து காத்திருக்கின்றன. இதுவரை லைகா நிறுவனம் விடாமுயற்சி படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், அனிருத் சமீபத்தில் அளித்த பேட்டியில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை உறுதி செய்துள்ளார்.
விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் சம்மருக்கு போஸ்ட்போண்ட் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இதுவரை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பொங்கலுக்குத்தான் குட் பேட் அக்லி வரும் என்று உறுதியாக உள்ளனர்.

இதற்கு இடையே ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கேம் சேஞ்சர் ரிலீஸ் தேதி: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது பொங்கலுக்கு மாற்றி உள்ளனர். வரும் ஜனவரி 10-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேம் சேஞ்சர் வெளியாகும் என்கிற அறிவிப்பை இயக்குனர் ஷங்கர் தனது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

அஜித்துடன் மோதும் ஷங்கர்: நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி அல்லது குட்பேட் அக்லி என இரு படங்களில் ஒரு படம் நிச்சயம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அஜித் குமாருடன் மோத இயக்குநர் ஷங்கர் ரெடியாகி இருப்பது அஜித் குமார் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
லைகா பாவம் இல்லையா?: இந்த ஆண்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், வரும் பொங்கலுக்கு லைகாவின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக ஷங்கர் தனது கேம் சேஞ்சர் படத்தை எப்படி வெளியிடலாம் என்கிற கேள்விகளும் லைகா நிறுவனம் பாவம் இல்லையா என்கிற கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.
பிரச்சனை வராது: ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் ஆந்திரா, தெலங்கானா மற்றும் பான் இந்தியா படமாக ஓடும். தமிழ்நாட்டில் அஜித் குமாரின் விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி எந்த படம் வந்தாலும் தாறுமாறாக ஓடும். அதனால், பெரிதாக பிரச்சனை வராது என்றே சினிமா வட்டாரத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொங்கலுக்கு தமிழ் சினிமாவிலேயே சூர்யாவின் 44, விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன், கமல்ஹாசனின் தக் லைஃப் என பல படங்கள் போட்டிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











