சங்கடத்தில் ஷங்கர்.. இந்தியன் 2 பிசினஸ் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையாம்?.. பெரிய மேஜிக் நடக்குமா?
சென்னை: இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இன்னமும் ரசிகர்கள் மத்தியில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் தூண்டப்படவில்லை என்பதும் அதே அளவுக்கு உண்மையாக உள்ளது.
டோலிவுட்டில் கல்கி, புஷ்பா 2 படங்கள் இந்த ஆண்டு கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த 2 படங்களுமே 1000 கோடி வசூலை குறிவைத்து இப்பவே ஓடிடி மற்றும் இந்தி ரைட்ஸ் என பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், இன்னமும் இந்தியன் 2 திரைப்படத்தின் பிசினஸ் பெரிய அளவில் நடக்கவில்லை என்றும் அதனால் லைகா நிறுவனம் செம அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனிருத் பார்த்த வேலை: இந்தியன் 2 அறிமுக வீடியோ வெளியிடுகிறேன் என ஷங்கர் வெளியிட்ட முதல் சாங் ப்ரோமோ வீடியோவில் தான் இந்தியன் 2 திரைப்படம் வசமாக சிக்கிக் கொண்டது என்கின்றனர். இந்தியன் தாத்தாவின் அறிமுகத்தை மிரட்டலாக ஷங்கர் காட்டாமல் அனிருத்தின் பாடலுடன் வெளியிட்டது மிகப்பெரிய தவறு என்றும் அதிலும், அனிருத்தின் இசை அந்த பாடலை காப்பாற்றாமல் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது என கடும் விமர்சனங்கள் கிளம்பின.
பல வருட மேக்கிங்: பிக் பாஸ் சீசன் 1ன் போது அறிவிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பிக் பாஸ் சீசன் 7 முடிந்த பின்னரும் இன்னமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் என்றாலும் இன்னமும் ரிலீஸ் தேதியை கூட லாக் செய்ய முடியாத சிக்கலில் ஷங்கர் இருப்பதாக கூறுகின்றனர்.
கல்கியால் வந்த கஷ்டம்?: பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடிப்பில் உருவாகி உள்ள கல்கி திரைப்படம் ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் புரோமஷன் பணிகள் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாக வெளியாக உள்ள இந்தியன் 2 படத்தின் எந்தவொரு புரோமோஷன் பணிகளையும் ஷங்கர் மற்றும் லைகா தொடங்கவில்லை. கல்கி படம் ஓவர்சீஸ், நார்த் இந்தியா என ஏற்கனவே கடை போட்டு விட்டதாக கூறுகின்றனர்.
சங்கடத்தில் ஷங்கர்?: 2015ம் ஆண்டு வெளியான ஐ, 2018ல் வெளியான 2.0 படங்கள் சொதப்பிய நிலையில், அதன் பின்னர் சுமார் 6 ஆண்டுகள் கழித்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் எந்தளவுக்கு ஹிட் கொடுக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்தியன் 2 படத்தையே இரண்டாக பிரித்து இந்தியன் 3 படத்தையும் ஷங்கர் உருவாக்க காரணமே தயாரிப்பு நிறுவனத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் என்கின்றனர். லைகா, ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே மாதம் நடைபெற உள்ள நிலையில், அதில், ஏதாவது மேஜிக்கை நிகழ்த்தி பெரியளவிலான பிசினஸை செய்ய ஷங்கர் திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலங்கள் என பலரை அந்த இசை வெளியீட்டு விழாவுக்கு அழைக்க திட்டமிட்டு வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











