அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை.. சண்முக பாண்டியன் பேட்டி!

சென்னை: கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்த கொம்புசீவி திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன், நாட்டாமை படத்தில் நடித்த டீசர் ராணியின் மகள் தரணி ஆகியோர் நடித்துள்ளனர். படம் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சண்முக பாண்டியன், அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை என்றார்.

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 10 வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். ஆனால், அப்போது அந்த படம் வெற்றி பெறவில்லை. தற்போது மீண்டும் சினிமாவில் சண்முக பாண்டியன் களமிறங்கி உள்ளார். இவர் நநடிப்பில் கடந்த ஜூன் மாதம் படைத்தலைவன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது கொம்புசீவி திரைப்படம் வெளியாகி உள்ளது.

Kombuseevi Shanmuga Pandian interview
Photo Credit:

கொம்புசீவி: கிராமத்து கதைக்களத்தை மையமாக கொண்டு நடந்த உணமை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சண்முக பாண்டியன், சரத்குமாரின் கம்போவை ரசிக்கும் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த், புலிக்கு பிறந்தது பூனையாகுமா... படம் நன்றாக இருக்கிறது. நான் சொல்வதை விட படத்தை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்க என்றார். இப்படம் முதல் நாளில் ரூ. 30 லட்சம் வசூல் செய்து இரண்டு நாட்களில் ரூ 60 லட்சத்தை வசூலித்துள்ளது.

சண்முகபாண்டியன் பேட்டி: படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகபாண்டியன், படம்மக்கள் ரசிக்கும் படி இருக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அது போல படம் பார்த்தவர்கள் ஒவ்வொரு காட்சிக்கும் கை தட்டினார்கள். நீங்களும் படத்தை பார்த்துவிட்டு விமர்சனத்தை சொல்லுங்க. அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை. அதனை படமாக எடுப்பதற்கு சரியான இயக்குநர் கிடைக்க வேண்டும். அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை சுலபமாக படமாக்க முடியாது. அதற்குச் சரியான ஒரு இயக்குனர் கிடைத்தால், நிச்சயம் நான் அப்பாவின் கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று சண்முக பாண்டியன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X