விஜயகாந்த் வீட்டு ஹீரோவின் தொழில் பக்தியை பார்த்தீங்களா?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படத்திற்காக தனது உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ளாராம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் அப்பா வழியில் ஹீரோவாகிறார். அவர் நடிக்கும் படத்திற்கு சகாப்தம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்திற்கான பூஜை விஜயகாந்தின் வீட்டிலேயே சூப்பராக நடந்தது.

மார்ச்
சகாப்தம் படத்தை வல்லரசு படத்தின் இணை இயக்குனராக இருந்த சந்தோஷ் குமார் இயக்குகிறார். படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்குகிறது.

கருப்பு நிலா
கருப்பு நிலா சண்முக பாண்டியன் 85 கிலோவாக இருந்தார். ஹீரோ சும்மா கும்மென்று இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது எடையை 20 கிலோ குறைத்துவிட்டார். தற்போது அவரது வெயிட் 65 கிலோ.

செம கலவை
சகாப்தம் படத்தில் குடும்பம், சென்டிமென்ட், காதல், ஆக்ஷன் என்று அனைத்தும் சரியான அளவில் இருக்குமாம்.

ஹீரோயின்
சண்முக பாண்டியனுக்கு ஏற்ற ஹீரோயின் தான் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் ஹீரோயின் தேடும் படலம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ஜூனியர் கேப்டன்
6 அடி 4 அங்குலமாக அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயரமாக இருக்கும் சண்முக பாண்டியன் நடிக்க வரும் முன்பே அவர் காட்டும் தொழில் பக்தியை பார்த்து பலரும் வியக்கிறார்களாம்.

விஜயகாந்த்
விஜயகாந்த் என்னதான் நாடாளுமன்ற தேர்தல் வேலையில் படுபிசியாக இருந்தாலும் இடையிடையே மகனின் பட டிஸ்கஷனில் கலந்து கொள்கிறாராம்.

கிளைமாக்ஸ்
சகாப்தம் படத்தின் கிளைமாக்ஸை பக்காவாக தயார் செய்துள்ளார்களாம். படம் வெளியான பிறகு அனைவரும் கிளைமாக்ஸை பற்றியே பேசுவார்களாம்.


Click it and Unblock the Notifications











