கிராமத்து பின்னணியில் மித்ரன் - கேப்டன் மகனுக்கு ஜோடியாகப் போவது யார்
சென்னை: மித்ரன் படத்தின் சண்முக பாண்டியனுடன் ஜோடியாக நடிக்க நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தற்போது நடித்து வரும் படம் மித்ரன். இந்த படத்தை துவங்கும் முன்னதாக சமீபத்தில் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு பூஜை போட்டனர். இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் தொடங்கி வைத்தார். கிராமப்புற பின்னணியில் உருவாகி வரும் குடும்ப பொழுதுபோக்கு படமான இதில் அவர் தீவிரமாக நடித்து வருகிறார்.

இந்த படம் குடும்பத்து படமாக இருக்கும்னும் மக்களிடம் வரவேற்பு பெறும் அப்படின்னும் சண்முக பாண்டியனின் அம்மா பிரேமலாத விஜயகாந்த் சொல்லியிருக்காங்க. ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம் படங்களில் இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜி.பூபாலன் எழுதி, இயக்குகிறார்.

சமீபத்தில் படக்குழு 'சல சல' என்ற துள்ளலான ஒரு பாடலை படமாக்கியிருக்கிறது. இது குறித்து படத்தின் இயக்குனர் ஜி.பூபாலன் கூறும்போது, பாடலின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகவும் நேசித்தோம். ஏனெனில் அது மிகவும் வேடிக்கையாக இருந்தது, மேலும் மொத்த படப்பிடிப்பு தளமும் மிகவும் எனர்ஜியுடன் இருந்ததை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா நாயகனின் அம்மாவாக நடிக்கிறார். இந்த படத்தின் சண்முகப் பாண்டியனின் ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் வம்சி கிருஷ்ணா வில்லனாக நடிக்க, அழகம் பெருமாள், சாய் தீனா மற்றும் பவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ.வெங்கடேஷ், பப்பு மற்றும் ஆஷிக் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் படம் முழுக்க தோன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முனிஷ்காந்த் நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











