நண்பேன்டா.. நெதர்லாந்தில் சிக்கிய 'கேப்டன்' மகன்.. ஃபேஸ் டைம் போட்டோஷூட் நடத்திய பார்த்திபன் மகன்!

By

சென்னை: நடிகர் சண்முகபாண்டியனை வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் செய்திருக்கிறார், நடிகர் பார்த்திபன் மகன்.

Recommended Video

Live: Premalatha Pampering Vijayakanth | Cute Love Video | Lock Down Diaries

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜய்காந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர், சகாப்தம் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

சுரேந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா உட்பட பலர் நடித்திருந்தனர்.

மதுரைவீரன்

மதுரைவீரன்

இதையடுத்து அவர் நடித்த படம், மதுரைவீரன். இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கினார். இதில் மீனாட்சி, வேல ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி கவனிக்கப்பட்டது. இதையடுத்து அவர் 'மித்ரன்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இதற்காக தனது உடல் கட்டமைப்பை மாற்ற நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றிருந்தார். அப்போதுதான் கொரோனா காரணமாக, லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் அங்குச் சிக்கிக்கொண்டார். அங்குள்ள சுமோ ஆம்ஸ்டாம் நகரில் இப்போது இருக்கிறார் சண்முகபாண்டியன்.

போட்டோ ஷூட்

போட்டோ ஷூட்

அவரை நடிகர் பார்த்திபனின் மகன், ராக்கி பார்த்திபன் 'ஃபேஸ் டைம் போட்டோ ஷூட்' எடுத்திருக்கிறார். இது வீடியோ மூலமாகவே புகைப்படத்தை எடுக்கும் புதிய முயற்சியாம்.
இதன் மூலம் ஒருவரை, அவர் அருகில் இல்லாவிட்டாலும் வீடியோ மூலமாகவே புகைப்படம் எடுக்க முடியுமாம். அதை சண்முக பாண்டியனும் ராக்கி பார்த்திபனும் இணைந்து எடுத்துள்ளனர்.

ஆக்‌ஷன் படங்களில்

ஆக்‌ஷன் படங்களில்

இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் எடுத்த போட்டோஸ், சண்முகபாண்டியன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது. இந்த மித்ரன் படத்தை அடுத்து, மேலும் இரண்டு ஆக்‌ஷன் படங்களில் நடிக்க இருக்கிறார் சண்முகபாண்டியன். அதற்கான அறிவிப்பு லாக்டவுன் முடிந்ததும் வெளியாகும் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X