‘அனல் பறக்கும் கண்கள் டாட்டூ’... கேப்டனுக்கு வித்தியாசமாக வாழ்த்துச் சொன்ன சண்முகபாண்டியன்!

விஜயகாந்தின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவைக்கு அவரது மகன் சண்முகபாண்டியன் நேரில் வாழ்த்து கூறினார்.

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவைக்கு வாழ்த்து சொல்லும் வகையில், அவரது கண்களை தனது கைகளில் டாட்டூவாக வரைந்துள்ளார் அவரது மகன் சண்முகபாண்டியன்.

திரையுலகினரால் கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த், சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 40 ஆண்டுகள் ஆகி விட்டன. இதற்காக அவரை திரைத்துறையினரும், ரசிகர்களும் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் விஜயகாந்தின் இளைய மகனும், கலைவாரிசுமான சண்முகபாண்டியன், தனது அப்பாவிற்கு வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்:

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தன் தந்தையுடன் காட்சி தருகிறார். கூடவே, அவரது கையில் விஜயகாந்தின் அனல் பறக்கும் கண்கள் டாட்டூ.

லண்டனில் வரைந்தது:

லண்டனில் வரைந்தது:

மேலும் அந்தப் பதிவில், ‘லண்டனில் #தமிழன்என்றுசொல் படப்பிடிப்பில் இருந்து இன்று சென்னை வந்தடைந்தேன். லண்டனில் என் தந்தையின் கண்களை, கைகளில் 'டாட்டு' வரைந்ததை அவரிடம் காட்டி உள்ளம் மகிழ்ந்தேன். பலமாதங்களுக்கு பிறகு எனது தந்தையை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது' என சண்முகபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சகாப்தம்:

சகாப்தம்:

சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சண்முகபாண்டியன். சமீபத்தில் அவரது இரண்டாவது படமான மதுரை வீரன் ரிலீசாகி, அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் மகிழ்ச்சி:

இந்தப் புகைப்படங்களை தனது டிவிட்டர் விஜயகாந்தும் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "#தமிழன்என்றுசொல் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற எனது இளைய மகன் சண்முகபாண்டியன், இன்று சென்னை வந்தடைந்தார். தன் கையில் எனது கண்களை பச்சைகுத்தியதை (tatoo) காட்டி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.

?rel=0&wmode=transparent" frameborder="0">

Petta | Rajini | karthick subburaj

Petta | Rajini | karthick subburaj

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X