twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பாவிற்கு டான்ஸ் கற்றுத்தரும் சாந்தனு.. வைரல் வீடியோ!

    |

    சென்னை : இயக்குனர் கே பாக்யராஜ் மற்றும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் தமிழ் திரைத்துறையில் அனைவரும் அறிந்த மிகவும் பிரபலமானவர்கள் ஆவார்.

    தந்தை மற்றும் மகனான இவர்கள் இதுவரை எந்த ஒரு படங்களிலும் தந்தை மகனாக நடிக்காத நிலையில் தற்போதுள்ள லாக்டவுன் சூழலில் யூடியூப் சேனல் மூலம் இவர்கள் இருவரும் இணைந்து உரையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட ஒரு வீடியோ ஒன்றில் சாந்தனு பாக்யராஜ் தனது தந்தை பாக்யராஜுக்கு நடனம் கற்று கொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    என் பேர வச்சு சம்பாதிச்ச காசல்லாம் கொடுங்க.. டிக்டாக்குடன் மல்லுக்கட்டும் பிக்பாஸ் பிரபலம்!என் பேர வச்சு சம்பாதிச்ச காசல்லாம் கொடுங்க.. டிக்டாக்குடன் மல்லுக்கட்டும் பிக்பாஸ் பிரபலம்!

    வெற்றி நிச்சயம்

    வெற்றி நிச்சயம்

    திரைத் துறையில் ஜொலிக்க திறமை மட்டும் இருந்தால் பத்தாது அதில் நேர்மையும் கண்டிப்பாக வேண்டும் அவ்வாறு நேர்மை இருந்தால் திரையுலகில் நாம் எங்கு போனாலும் எந்த ஒரு இடத்திற்கு போனாலும் வெற்றி நிச்சயம் நம்மைத் தேடி வரும் என்பதில் உறுதியாக இருப்பவர் இயக்குனர் கே பாக்யராஜ்.

    சிறந்த திரைக்கதை

    சிறந்த திரைக்கதை

    அது போல, தான் செய்யும் தொழில் மீது மிகவும் உண்மையாக இருந்து வரும் கே பாக்யராஜ் இந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனராகவும் சிறந்த திரைக்கதை அமைப்பாளராகவும் இன்றுவரை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

    முந்தானை முடிச்சு

    முந்தானை முடிச்சு

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழியில் படங்களை இயக்கியுள்ள கே பாக்யராஜ், தமிழில் எண்ணற்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் கதாநாயகனாக நடித்துள்ள இது நம்ம ஆளு, முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள், இன்று போய் நாளை வா போன்ற படங்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

    நடனத்திலும்

    நடனத்திலும்

    இயக்கத்திலும் திரைக்கதையிலும் யாராலும் அசைக்க முடியாத ஜாம்பவானாக வலம் வரும் பாக்கியராஜ் நடனம் என்றால் மட்டும் கொஞ்சம் பயப்படுவார். தனக்கு நடனம் சரியாக வராது என்ற காரணத்தினாலேயே தனது மகன் நன்றாக ஆட வேண்டும் என்று நினைத்தார். அவர் நினைத்தது போல தற்பொழுது சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் மிகத் திறமையானவராக விளங்கி வருகிறார்.

    உரையாடல்கள்

    உரையாடல்கள்

    இந்த நிலையில் சாந்தனு பாக்யராஜ் சில நாட்களுக்கு முன்பு தந்தையர் தினத்தன்று ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் தனது தந்தை கே பாக்யராஜ் உடன் இணைந்து உரையாடும் உரையாடல்களை அதில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

    பலருக்கும் தெரியாத

    பலருக்கும் தெரியாத

    நாளுக்குநாள் சுவாரசியமான நிகழ்வுகளை பற்றி பேசி வரும் இவர்களின் இந்த உரையாடல் நிகழ்ச்சி நம்மில் பலருக்கும் தெரியாத பல சுவாரசியமான விஷயங்களை வெளியில் கொண்டுவந்துள்ளது.

    கேட்ட கேள்விக்கு

    கேட்ட கேள்விக்கு

    என்றபோதிலும் சமீபத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றில் சாந்தனு பாக்கியராஜ் தனது தந்தையை நோக்கி கேள்வி ஒன்றை கேட்கிறார். அதில் நான் ஒரு மகனாக உங்களைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும் என்றால் அது என்னவாக இருக்கும்" எனக் கேட்ட கேள்விக்கு இயக்குனர் கே பாக்யராஜ் தனது ஆரம்ப காலகட்டத்தில் உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது தான் நடந்து கொண்ட சில நேர்மையான நிகழ்வுகளைப் பற்றி நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். அதை பற்றி சற்றும் அறிந்திராத நமக்கு அது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்த நிலையில் இந்த உரையாடலின் முடிவில் சாந்தனு , பாக்யராஜ்க்கு நடனம் கற்றுத் தர உள்ளேன் என கூறுகிறார்.

    டாக்ஸி டாக்ஸி

    டாக்ஸி டாக்ஸி

    அதற்க்கு பாக்யராஜ் நான் ஆடுற மாதிரி ஈஸியான பாட்டை போடு பா எனக்கேட்க சாந்தனு பாக்யராஜ் உடனடியாக சக்கரகட்டி படத்திலிருந்து டாக்ஸி டாக்ஸி பாடலை போட்டு தனது பாணியில் புதுமையான சில நடன அசைவுகளை போட, பாக்யராஜ் அதை பார்த்துவிட்டு நமக்கு இதெல்லாம் செட்டாகாது எ‌ன்றா‌ர்.

    ஈசியான நடனத்தில்

    ஈசியான நடனத்தில்

    பின் வழக்கம்போல படங்களில் ஆடும் ஈசியான நடனத்தை ஆட, தனக்கு நடனத்தில் கற்றுக் கொடுக்க வந்த சாந்தனுவை தனது வழக்கமான நடனத்தை ஆட வைத்துள்ளார். இவ்வாறு சுவாரசியமாக இருந்த இந்த தந்தை மகன் உரையாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    English summary
    Shantanu and his father bhagyaraj dancing at home
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X