டைட்டிலே செம சமாச்சாரமா இருக்கே.. சாந்தனுவின் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை: தந்தை பாக்யராஜ் உடன் மகன் சாந்தனு இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்கு 'முருங்கைகாய் சிப்ஸ்' என டைட்டில் வைத்துள்ளனர்.

இயக்குநர் ஸ்ரீஜார் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்யராஜ் இணைந்து நடிக்கப்போவதாக, லாக்டவுனுக்கு முன்னதாக புதிய படத்தின் பூஜை போடப்பட்டது.

இந்நிலையில், தற்போது அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

முருங்கைக்காய் காமெடி

முருங்கைக்காய் காமெடி

பாக்யராஜ் இயக்கத்தில் 1983ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. அந்த படத்தில் கணவனை உசுப்பேற்ற நடிகை ஊர்வசி, முருங்கை மரத்தையே வெட்டி, முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்காய் பொரியல், முருங்கப்பூ கூட்டு என ஒரே முருங்கைக்காய் ஸ்பெஷலாக வைத்து, அந்த இரவு அவரை படாத பாடு படுத்தி இருப்பார். ரசிகர்கள் மத்தியில், இன்னமும் பாக்யராஜ் என்றவுடனே முருங்கைக்காய் காமெடியும் நினைவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

செகண்ட் இன்னிங்ஸ்

செகண்ட் இன்னிங்ஸ்

வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் பாக்யராஜின் மகனாக சாந்தனு சினிமாவில் அறிமுகமானார். சக்கரகட்டி படத்தில் ஹீரோவாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அறிமுகம் ஆனவருக்கு அந்த படம் பெரிதாக கை கொடுக்கவில்லை. வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆனாலும், தொடர்ந்து பல படங்கள் அவருக்கு தோல்வியே கொடுத்தன. தற்போது, வானம் கொட்டட்டும், மாஸ்டர் என செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி உள்ளார் சாந்தனு.

மாஸ்டரில் நல்ல ரோல்

மாஸ்டரில் நல்ல ரோல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்டிர்யா என நட்சத்திர பட்டாளங்களே நடித்து வரும் மாஸ்டர் படத்தில், தனக்கு ஒரு நல்ல ரோல் அமைந்திருப்பதாகவும், இது தனது முதல் படம் போல இருக்கும் என்றும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் சாந்தனு பேசி இருந்தார்.

முருங்கைகாய் சிப்ஸ்

லாக்டவுனுக்கு முன்னதாக இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், தற்போது, முருங்கைகாய் சிப்ஸ் என்ற வித்தியாசமான டைட்டிலுடன், முதலிரவு கோலத்தில் நடிகை அதுல்யா ரவியுடன் கட்டிலில் அமர்ந்திருக்கும் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. தயாரிப்பாளர் ரவிந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

புதுசா இருக்கே

புதுசா இருக்கே

முந்தானை முடிச்சு படத்திலேயே நடிகை ஊர்வசி முருங்கைக் காயை வைத்து இப்படி ஒரு டிஷ் செய்து இருக்க மாட்டார். இந்நிலையில், முருங்கைகாய் சிப்ஸ் என்ற டைட்டிலில் சாந்தனு, பாக்யராஜின் படம் உருவாகிறது என்ற அறிவிப்பை பார்த்ததுமே, கோலிவுட் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை புதுசா இருக்கே, முருங்கைக் காயில் எப்படி சிப்ஸ் போட முடியும் என விவாதித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X